சுந்தரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகர்… எதிர்பார்ப்பை தூண்டும் சீசன் 2!
சன் டிவி “சுந்தரி” சீரியலில், முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனில் நடிகர் கிருஷ்ணா வெற்றி கதாபாத்திரத்தில் சுந்தரிக்கு ஜோடியாக இருக்கிறார்.
சுந்தரி சீரியல்:
பரபரப்பான இறுதி கட்டத்துடன் சுந்தரி சீரியல் முடிவடைந்துள்ளது. அதில் கார்த்திக் தற்கொலை செய்து கொள்வதும், அணு வீட்டை விட்டு வெளியேறி இருப்பதுமாக முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து புது கதையுடன் சுந்தரி சீரியல் இரண்டாம் பாகம் தொடங்கி இருக்கிறது. அதில் சுந்தரிக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா வெற்றி கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார். சுந்தரிக்கு ஏற்கனவே மகள் இருக்க, வெற்றிக்கு ஒரு மகன் இருக்கிறான்.
ஜி-20 உச்சி மாநாட்டில் அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்போகும் இந்தியா – அறிவிப்பு வெளியீடு!
சுந்தரி கலெக்டராக இருக்க, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என பாட்டி நினைக்கிறார். இந்த கதை எப்படி செல்லும், என்னென்ன திருப்பங்கள் வர இருக்கிறது என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் தெரியும். தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா சுந்தரிக்கு ஜோடியாக களமிறங்கி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.