தமிழக தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான தகுதி குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

தொழில் பயிற்சி நிலையம்:

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல் கல்லூரிகளிலும் வரும் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஜோ.அமலாரெக்சலீன் அவர்கள் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இணையம் மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூலை 26 முதல் TNUSRB இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதித்தேர்வு!!

தொழில் பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலைய விவரம், தொழில் பிரிவுகள், அதற்கான வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை இந்த துறைக்கான இணையம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும்.

அதேபோல் இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, பாட நூல்கள், காலணிகள், சீருடைகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறும் போதே மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களின் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல் பயிற்சி முடிந்த பின் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும். இந்நிலையில் தொழில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இணையம் மூலம் வரும் ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தொழில் பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்துக்கு அசல் சான்றிதழ்களுடன் மாணவர்கள் நேரில் வந்தால் இலவசமாக இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மதுரை அரசு தொழில் பயிற்சி நிலையம் 88255 11818, 99760 10003, செக்கானூரணி தொழில் பயிற்சி நிலையம் 99948 71137, 89400 61989 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!