Home Entertainment ‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து – காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நட்சத்திரா! ரசிகர்கள் ஷாக்!

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து – காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நட்சத்திரா! ரசிகர்கள் ஷாக்!

0
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து – காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நட்சத்திரா! ரசிகர்கள் ஷாக்!
'செம்பருத்தி' ஷபானா, ஆர்யன் விவாகரத்து - காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நட்சத்திரா! ரசிகர்கள் ஷாக்!
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து – காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நட்சத்திரா! ரசிகர்கள் ஷாக்!

ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை நக்ஷத்ரா தனது ஆரம்ப கால வாழ்க்கை, சினிமா அனுபவம், முதல் காதல், சீரியல் வாய்ப்பு, கலர்ஸ் தமிழின் ‘வள்ளி திருமணம்’ தொடர் குறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை நக்ஷத்ரா

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த ‘யாரடி நீ மோகினி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்திருப்பவர் பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ரா. இந்த தொடரில் முத்து மாமா என்று எப்போதும் சுற்றி திரியும் ஒரு அப்பாவி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனம் ஈர்த்திருப்பவர் தான் நடிகை நக்ஷத்ரா. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள அயத்தில் எனும் ஊரில் பிறந்து வளர்ந்து வந்த நக்ஷத்ரா தனது சினிமா பயணம், சின்னத்திரை அனுபவம் குறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை நக்ஷத்ராவுக்கு சிறிய வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லையாம். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாத சாதாரண ஆட்டோ டிரைவரின் மகளான நக்ஷத்ரா சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய அம்மாவின் கனவாம். இது குறித்து அவரது அம்மா பேசும் போதெல்லாம், மற்றவர்கள் நக்ஷத்ராவை பார்த்து சிரிப்பார்களாம். அப்போதெல்லாம் தன்னை நடிகை என்று சொல்ல வேண்டாம் என தனது அம்மாவை திட்டி வரும் நக்ஷத்ராவை காலம் சினிமா துறையுடன் முடிச்சு போட்டிருக்கிறது.

1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

கேரளாவில் சில குறும்படங்களில் நடித்து வந்த நக்ஷத்ராவுக்கு ‘கிடா பூசாரி மகுடி’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் நடித்து முடித்ததும் அந்த திரைப்படத்தில் நக்ஷத்ராவுடன் நடித்திருந்த சுகுமார் என்பவரது மூலம் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பாக சென்னை என்ற பெயரை கேட்டாலே துபாய் அளவுக்கு யோசித்து கொண்டிருந்த நக்ஷத்ராவுக்கு சென்னை தான் தற்போது சொந்த ஊராக மாறி இருக்கிறது.

சினிமா வாய்ப்புகள் குறித்து நக்ஷத்ரா கூறும் போது, சீரியலில் நடிக்க துவங்கிய கால கட்டத்தில் தான் சில சினிமா வாய்ப்புகள் இவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் சீரியலை முக்கியம் என்று கருதியதால் கிடைத்த வாய்ப்புகளுக்கு நோ சொல்லி இருக்கிறார் நடிகை நக்ஷத்ரா. மேலும் சீரியலில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறிய அவர் மாதத்தில் 21 நாட்கள் ஷூட்டிங் முடித்து மற்ற நாட்களில் தன்னுடைய வேலையை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கலர்ஸ் தமிழ் டிவியின் ‘வள்ளி திருமணம்’ சீரியல் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசும் போது, ‘யாரடி நீ மோகினி’ சீரியல் முடிந்ததும் கலர்ஸ் தமிழின் ‘அபி டெய்லர்’ சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிக்கும் போது ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடிக்க வேண்டும் என்று என்னை கேட்டார்கள். முதலில் மறுத்தாலும் பிறகு சரி என்று ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் வெண்ணிலா மற்றும் வள்ளி என்ற 2 கதாப்பாத்திரங்களும் தனக்கு ஸ்பெஷல் என்று கூறுகிறார் நடிகை நக்ஷத்ரா.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 இல் சம்பள உயர்வு அறிவிப்பு? காத்திருக்கும் ஜாக்பாட்!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்த போது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை நக்ஷத்ரா காதலித்ததாகவும், பின்னர் அந்த காதல் முடிவுக்கு வந்ததாகவும் முதல் காதல் அனுபவம் குறித்து இவர் மனம் திறந்துள்ளார். பிறகு ஜீ தமிழ் சீரியலில் நடித்தபோது, சக நடிகைகளுடன் நட்புடன் இருந்து வந்த நடிகை நக்ஷத்ரா அந்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது சீரியலில் நடித்து வந்த போது, நடிகை சைத்ரா, ஷபானா, ரேஷ்மா அனைவரும் ஒன்றாக இருந்ததாகவும் இப்போது எல்லாருக்கும் திருமணம் ஆகி விட்டதால் அவர்கள் அவரவர் குடும்பத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதனால் இவர்கள் சந்திக்கும் நேரம் இப்போது குறைவாக இருந்தாலும், அடிக்கடி போனில் பேசிக்கொள்வார்களாம். மேலும் நடிகை சைத்ராவின் ‘வலிமை’ திரைப்பட வாய்ப்பு குறித்தும் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் ஷபானா – ஆர்யன் பற்றிய வதந்தி குறித்து பேசிய நடிகை நக்ஷத்ரா, இருவரும் சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் இது போன்ற செய்திகள் எழுகிறது. ஆனால், ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை நக்ஷத்ரா.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here