மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 இல் சம்பள உயர்வு அறிவிப்பு? காத்திருக்கும் ஜாக்பாட்!
மத்திய அரசு தனது அனைத்து ஊழியர்களுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இந்த அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து பிட்மெண்ட் காரணி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிட்மெண்ட் காரணி உயர்வு:
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் கடந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக வழங்கப்படவில்லை. அதனால் கடந்த நவம்பர் மாதம் இதுவரை வழங்கப்பட்டு வந்த 28% லிருந்து 3% உயர்த்தி 31% ஆக வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜன.7 முதல் திங்கட்கிழமை வரை வார இறுதி முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
அதனை தொடர்ந்து மற்றொரு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வழங்கவுள்ள 31% அகவிலைப்படியில் இருந்து மீண்டும் 3% உயர்த்தி 34% ஆக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மெண்ட் காரணி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிட்மெண்ட் காரணி கடந்த 2016ம் ஆண்டு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.6000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது.
மறுஉத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை & இரவு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
அதன் அடிப்படையில் தற்போது பிட்மெண்ட் காரணி உயர்த்தப்படுவதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.26,000 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வரும் ஜன.26ம் தேதிக்கு முன்னர் ஆலோசனை கூட்டம் நடத்தி ஜன.26ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய தகவல் மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்