திருமணத்திற்கு பிறகு ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய தோற்றம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
திருமணத்திற்கு பிறகு 'செம்பருத்தி' ஷபானாவின் புதிய தோற்றம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
திருமணத்திற்கு பிறகு 'செம்பருத்தி' ஷபானாவின் புதிய தோற்றம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
திருமணத்திற்கு பிறகு ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய தோற்றம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் தனது திருமணத்திற்கு பிற்பாடு சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.

நடிகை ஷபானா

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து சமீபத்தில் சாதனை நிகழ்த்தி இருந்த ஒரு முக்கியமான சீரியல் ‘செம்பருத்தி’. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த ‘செம்பருத்தி’ சீரியல் பல்வேறு ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்து அதிகப்படியான மக்களின் கவனம் ஈர்த்து வரும் இந்த சீரியலின் ஆதி, பார்வதி ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் யார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த சீரியலின் கதைக்களம் சினிமா பாணியில் அமைக்கப்பட்ட சில ரொமான்டிக் காட்சிகளுடன் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இத்தொடரில் இருந்து நடிகர் கார்த்திக் ராஜ் விலகியதும் சறுக்கலை சந்தித்து வந்த கதைக்களம் தற்போது மீண்டுமாக புதிய வேகம் எடுத்திருக்கிறது. இத்தொடரில் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருப்பவர் நடிகை ஷபானா. தமிழ் சின்னத்திரையில் நடிகை ஷபானா அறிமுகமான முதல் தொடரான ‘செம்பருத்தி’ இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது.

‘பிக் பாஸ்’ ப்ரியங்கா கணவருடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்படி இருக்க சமீபத்தில் விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஷபானா மீண்டுமாக சீரியல் ஷூட்டிங் என்று பிசியாக இருந்து வருகிறார். என்றாலும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷபானா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அதே போல தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பாடலுக்கு, கெத்தான லுக்கில் ரீல்ஸ் செய்துள்ள ஷபானா அதனை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!