Home news தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த தொற்று 5 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பள்ளிகள் மூடப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்:

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலுக்கி வந்த கொரோனா பெருந்தொற்று பல்வேறு அவதாரங்களை எடுத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை உருமாறிய கொரோனா வகையாக ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மற்றுமொரு உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!

உலகில் 34க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை மொத்தம் 23 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதன் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் 5 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறந்து கடந்த 2 மாதங்களாக மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பாக்கியாவின் விளம்பரத்தை பார்த்து சந்தோசப்படும் குடும்பத்தினர், பேஸ்புக் பற்றி சொல்லி கொடுக்கும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்று காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதாவது பொதுமுடக்கம் குறித்து இந்த மாதம் பொதுமுடக்க தளர்வுகள் ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ குழுவுடன் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிடுவார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here