பாக்கியாவின் விளம்பரத்தை பார்த்து சந்தோசப்படும் குடும்பத்தினர், பேஸ்புக் பற்றி சொல்லி கொடுக்கும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியாவின் விளம்பரத்தை பார்த்து சந்தோசப்படும் குடும்பத்தினர், பேஸ்புக் பற்றி சொல்லி கொடுக்கும் ஜெனி - இன்றைய
பாக்கியாவின் விளம்பரத்தை பார்த்து சந்தோசப்படும் குடும்பத்தினர், பேஸ்புக் பற்றி சொல்லி கொடுக்கும் ஜெனி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியாவின் விளம்பரத்தை பார்த்து சந்தோசப்படும் குடும்பத்தினர், பேஸ்புக் பற்றி சொல்லி கொடுக்கும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியலட்சுமி தனது விளம்பரம் டிவியில் வர அதை குடும்பத்துடன் பார்த்து சந்தோசப்படுகிறார். பின் ஜெனி மற்றும் இனியா சேர்ந்து பாக்கியாவிற்கு பேஸ்புக் பயன்படுத்த சொல்லி கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா இனியாவிற்கு கட்டுரை போட்டிக்கு கட்டுரை எழுதி கொடுக்கிறார். பின் ஜெனி பாக்கியாவின் கையெழுத்தை பார்த்து அழகாக இருக்கிறது என சொல்கிறார். ஆனால் இனியா நம்பிக்கை இல்லாமல் இருக்க, இதையே கொண்டு சென்று கொடுக்கிறேன் என சொல்கிறார். பின் செழியன் வேகமாக வந்து எல்லாரையும் கூப்பிடுகிறார். பாக்கியா சமையலறையில் இருக்க, எழில் வேகமாக சென்று அவரை கூட்டி வருகிறார். பின் தாத்தா செழியன் ஜெனி எல்லாரையும் கூப்பிட்டு டிவியில் விளம்பரம் ஒன்றை போட்டு விடுகிறார்.

நெஞ்சுவலியால் துடிக்கும் தனத்தின் அம்மா, தனத்தை அழைத்து செல்ல வரும் ஜெகா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அனைவரும் அந்த விளம்பரத்தை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் பாக்கியா நடிப்பதை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். குடும்பத்தினர் அனைவரும் பாக்கியாவின் விளம்பரத்தை பார்த்து அருமையாக இருக்கிறது என நினைக்கின்றனர். இது டிவியில் வருமா என ஈஸ்வரி கேட்க டிவியில் வராது சமூக வலைத்தளங்களில் தான் இதை போட போகிறேன் என எழில் சொல்கிறார். அதில் போட்டால் எப்படி எல்லாருக்கும் தெரியும் என ஈஸ்வரி கேட்க, அதெல்லாம் நன்றாக தெரியும் என ஜெனி சொல்கிறார்.

பின் ஜெனி இனியா சேர்ந்து பாக்கியாவிற்கு பேஸ்புக் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி சொல்லி கொடுக்கிறார்கள். பின் பாக்கியா இனியாவின் நண்பர்களை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு சுத்தமாக பேஸ்புக் பற்றி தெரியவில்லை. பின் ஜெனி ஒன்று ஒன்றாக சொல்லி கொடுக்க, பாக்கியாவிற்கு தனியாக கணக்கு தொடங்குகிறார். அப்போது என்ன பெயர் வைக்க என கேட்க, பாக்கியா கோபிநாத் என வைக்க சொல்கிறார். அதை கேட்டு ஜெனி கிண்டல் செய்கிறார்.

லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

எழில் அமிர்தா அம்மா அப்பாவை பார்க்க போக அங்கே நிலா பாப்பாவை லட்டு லட்டு என கொஞ்சுகிறார். அப்போது என்ன லட்டு என கூப்பிடுகிறேன் என நினைக்கிறீர்களா என் தங்கச்சியை அப்படியே கூப்பிட்டு பழக்கமாகிவிட்டது என எழில் சொல்கிறார். பின் அம்மா அப்பா அமிர்தாவை கூப்பிட அவர் எனக்கு வேலை இருக்கிறது என வராமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here