இதை செய்யாவிட்டால் ஏப்.14ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் – முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள்!

0
இதை செய்யாவிட்டால் ஏப்.14ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் - முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள்!
இதை செய்யாவிட்டால் ஏப்.14ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் - முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள்!
இதை செய்யாவிட்டால் ஏப்.14ஆம் தேதி பட்டினி போராட்டம் நடத்தப்படும் – முதல்வருக்கு கடிதம் அனுப்பிய குழந்தைகள்!

தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் தினமும் லாரிகள் மூலமாக கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கனிம வளங்களை கடத்துவதை தடுக்க வேண்டும் என்று பள்ளி குழந்தைகள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

பட்டினி போராட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் இதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலமாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. தங்கள் ஊரிலிருந்து கனிம வளங்களை கடத்துவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கீழகடையம் ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் மகள்கள் இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னையில் இன்று (ஏப்ரல் 5) பெட்ரோல் டீசல் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்த கடிதத்தில், தங்கள் ஊரில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை உடனடியாக அரசு தடுக்க வேண்டும் என்றும் இதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 14-ஆம் தேதி அன்று கடையம் சின்னத்தேர் திடலில் பட்டினிப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!