SBI Kisan Credit Card திட்டம் – குறைந்த வட்டியில் கடன்! சூப்பர் திட்டத்தின் முழு விபரங்கள் இதோ!

0
SBI Kisan Credit Card திட்டம் - குறைந்த வட்டியில் கடன்! சூப்பர் திட்டத்தின் முழு விபரங்கள் இதோ!
SBI Kisan Credit Card திட்டம் - குறைந்த வட்டியில் கடன்! சூப்பர் திட்டத்தின் முழு விபரங்கள் இதோ!
SBI Kisan Credit Card திட்டம் – குறைந்த வட்டியில் கடன்! சூப்பர் திட்டத்தின் முழு விபரங்கள் இதோ!

விவசாயிகள் தங்களின் நிலத்தில் அறுவடை செய்யும் போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க எஸ்.பி.ஐ. கிஸான் கிரெடிட் கார்டுகள் மூலம் 3 லட்சம் வரை 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. அது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

கிஸான் கிரெடிட் கார்டு:

நமது பணத் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் இயங்கி வருகின்றன. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வங்கிகளில் பல்வேறு தேவைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களின் நிலத்தில் அறுவடை செய்யும் போது ஏற்படும் செலவுகளை சமாளிக்க தேவையான கடன்களை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. தங்களின் கிஸான் கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கி வருகிறது.

நிலுவை ஊதியம் தொடர்பாக தமிழக அரசின் அரசாணை – தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

மற்ற கிரெடிட் கார்டுகளை போல தான் கிசான் கிரெடிட் கார்டுகளும். இந்த கணக்கில் இருக்கும் பேலன்ஸிற்கு வங்கி வட்டி வழங்கிவருகிறது. ஐந்து ஆண்டு வங்கிக் கணக்கு சேவையில் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 10% பேலன்ஸ் வைக்கப்படுகிறது. இந்த கிசான் கிரெடிட் கார்டு ரூ.3 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இது பயிர் காலம் மற்றும் பயிருக்கான சந்தைப்படுத்தல் காலத்தின் போது திருப்பி செலுத்தும் வசதியையும் வழங்குகிறது.

95 நாட்களுக்கு பின்னர் மெல்ல நடக்க தொடங்கிய நடிகை யாஷிகா – ரசிகர்கள் வருத்தம்!

45 நாட்களுக்கு ஒருமுறை கார்டை ஆக்டிவேட் செய்தால் ரூ.1 லட்சம் விபத்து காப்பீட்டுடன் ரூபே கார்டுகளையும் வழங்கி வருகிறது. இந்த கார்டை பெறுவதற்கு கிசான் கிரெடிட் கார்டுகளை பெறுவதற்கு விவசாயிகள் தனிநபராகவும், கூட்டாகவும் விண்ணப்பிக்க முடியும். மேலும் நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்யும் நபர்களும் இந்த சேவையை பெற முடியும். அதேபோல் சுய உதவிக் குழுக்கள் அல்லது குத்தகை விவசாயிகள், பங்கு பயிர் செய்பவர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு 3 லட்சம் வரை 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!