பள்ளிகளில் தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடக்கும் ????

0
பள்ளிகளில் தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடக்கும்
பள்ளிகளில் தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடக்கும்

பள்ளிகளில் தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடக்கும் ????

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தற்போதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாநிலங்களில் பள்ளிகள் திறந்த உடன் நடைபெற வேண்டிய வழிமுறைகளை தேசிய கல்வி அறிவித்து உள்ளது. இதில் மாணவர்களின் நலனிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடக்கும் :

அதாவது வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் ஒற்றைபடை மற்றும் இரட்டைப்படை வரிசையில் இரண்டு ஷிப்ட்களாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தினசரி தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடக்கும் போன்ற வழிமுறைகளையும் முன்னெடுக்க உள்ளது.

பள்ளியில் மாணவர்களுக்கு இடையே போதிய சமூக இடைவெளி இருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் ஒன்றாக செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு 6 கட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை,

  • முதல் கட்டம் – பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்
  • இரண்டாவது கட்டம் – 1 வாரம் கழித்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
  • மூன்றாவது கட்டம் – 2 வாரம் கழித்து 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
  • நான்காவது கட்டம் – 3 வாரம் கழித்து 3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
  • ஐந்தாவது கட்டம் – 4 வாரம் கழித்து 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
  • ஆறாவது கட்டம் – 5 வாரம் கழித்து மழலையர் பள்ளிகள் மற்றும் கேஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் திறக்கப்படும்

Velaivaippu Seithigal 2020

கட்டுப்பாட்டு வழிமுறைகள் :

  • ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
  • மாணவர்களிடையே 4 அடி இடைவேகியாவது கட்டாயம் இருக்க வேண்டும்.
  • வகுப்பில் ஏசி போடக்கூடாது. ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்
  • மாணவர்கள் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும். வேறு வேறு நாற்காலியில் அமரக்கூடாது.
  • வகுப்புகள் தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • மாணவர்கள் எதனையும் பகிர்ந்து உண்ணக் கூடாது.
  • மருத்துவம் பாதுகாப்பு துறைகளில் பெற்றோர்கள் பணிபுரிந்தால் அதனை முன்னரே தெரிவிக்க வேண்டும்.
  • ஆசிரியர்களுடன் சந்திப்பை பெறோர்கள் மேற்கொள்ள கூடாது.
  • விடுதிகளிலும் சமூக இடைவெளி அவசியம்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!