Reliance Jio ரூ.599 திட்டத்தில் உள்ள கூடுதல் சலுகைகள் – முழு விவரங்கள் இதோ!

0
Reliance Jio ரூ.599 திட்டத்தில் உள்ள கூடுதல் சலுகைகள் - முழு விவரங்கள் இதோ!
Reliance Jio ரூ.599 திட்டத்தில் உள்ள கூடுதல் சலுகைகள் - முழு விவரங்கள் இதோ!
Reliance Jio ரூ.599 திட்டத்தில் உள்ள கூடுதல் சலுகைகள் – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு ரூ.500 க்கும் அதிகமான சில ரீசார்ஜ் திட்டங்களை சிறப்பு சலுகைகளுடன் வழங்குகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு வகையான சிறப்பு சலுகைகளை அளித்து தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஜியோ பயனர்கள் குறைந்தபட்சமாக ரூ .98 முதல் அதிகபட்சமாக ரூ .3,499 வரையிலான ரீசார்ஜ் திட்டங்களை கூடுதல் சலுகைகளுடன் அனுபவிக்க முடியும். இதில் கொடுக்கப்படும் சில ரீசார்ஜ் திட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

Tokyo 2020 Paralympic துவக்க விழா – தமிழக வீரர் மாரியப்பன் பங்கேற்க தடை!

அதன் படி ரிலையன்ஸ் ஜியோவின் 2 ரீசார்ஜ் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கையில், 1 ரூபாய் மட்டும் கூடுதலாக செலவழிப்பதன் மூலம் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில் 56 GB கூடுதல் டேட்டாவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகைகளை அளிக்கும் ஜியோவின் திட்டங்கள் ரூ.598 மற்றும் ரூ.599 என வருகிறது. அந்த வகையில் பயனர்களின் வசதிக்காக ஜியோவின் இந்த திட்டங்களில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் ஜியோவின் ரூ.598 திட்டம், 56 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினசரி 2 GB டேட்டாவுடன் வருகிறது. அதாவது, ஜியோவின் இந்தத் திட்டத்தில் மொத்தம் 112 GB டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் அனைத்து நெட்வொர்க் சேவைகளுக்கும் இலவச கால்ஸ், தினசரி 100 இலவச SMS, டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேலும், ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அடுத்ததாக ஜியோவின் ரூ.599 திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினசரி 2 GB டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 168 GB அதிவேக டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS உடன் ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. இந்த 2 டேட்டா திட்டங்களையும் உற்று நோக்குகையில் ரூ.598 திட்டத்தை விட 1 ரூபாய் அதிகம் செலவழிப்பதன் மூலம், ரூ.599 திட்டத்தில் பயனர்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான டேட்டா சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும். அதாவது ரூ .598 திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் 56.

ஆனால் 1 ரூபாய் அதிகம் செலவழித்தால் ரூ.599 திட்டத்தில் கூடுதல் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட சிறந்த திட்டத்தை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் ரூ.599 திட்டத்தில் 168 GB டேட்டாவும், ரூ.598 திட்டத்தில் 112 GB டேட்டா மட்டுமே கிடைக்கிறது. மேலும் ரூ.599 திட்டத்தில், பயனர்கள் 56 GB கூடுதல் டேட்டாவைப் பெறுகிறார்கள். மொத்தத்தில், 1 ரூபாய் அதிகமாக செலவழிப்பதன் மூலம் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் 56 GB கூடுதல் டேட்டாவை பெற முடியும். இருப்பினும், ரூ.598 திட்டத்தில் கொடுக்கப்படும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ரூ.599 திட்டத்தில் கொடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!