Reliance Jio வின் ரூ.100க்கான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!

0
Reliance Jio வின் ரூ.100க்கான ரீசார்ஜ் திட்டம் - முழு விவரம் இதோ!
Reliance Jio வின் ரூ.100க்கான ரீசார்ஜ் திட்டம் - முழு விவரம் இதோ!
Reliance Jio வின் ரூ.100க்கான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரூ.100க்கும் குறைவான சில ரீசார்ஜ் திட்டங்களை அன்லிமிடெட் கால்ஸ், சிறந்த டேட்டா வசதியுடன் சில கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.

ரீசார்ஜ் திட்டம்:

தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இடத்தை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. அதாவது இந்திய அளவில் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம், அடிக்கடி சில இலவச சலுகைகளை கொடுத்து தனது பயனர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் துவங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வழங்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கல் – போராட்டம் அறிவிப்பு!

அந்த வகையில் ஜியோவில் மலிவான திட்டங்களை நீங்கள் தேடினால், ரூ.100 ரூபாய் கொண்ட சில திட்டத்தை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் குறிப்பிட்ட அளவு டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்கப்படுகின்றன. இதனுடன் ஜியோவின் சில இலவச சலுகைகளும் நீண்ட காலம் செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 21 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட டேட்டா முடிந்த பிறகு, இதன் வேகம் 64Kbps க்கு குறைகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்ததாக ரூ.129 திட்டம் 100 ரூபாயை விட சற்று விலை அதிகம். ஆனால் அதில் கிடைக்கும் நன்மைகளும் அதிகம் தான். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதனுடன் அன்லிமிடெட் டேட்டாவுடன் 300 இலவச SMS சேவைகளும் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ க்ளவுட், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ நியூஸ் போன்ற சேவைகளின் சந்தா இலவசமாக கிடைக்கும். தொடர்ந்து ஜியோ ரூ.149 திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டாவை 24 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் கீழ் ஒவ்வொரு நாளுக்குமான டேட்டா முடிந்த பிறகு, வேகம் 64Kbps க்கு குறைகிறது. தவிர தினசரி 100 SMS மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் சேவைகளும் கிடைக்கிறது. ஜியோவின் இந்த ரீசார்ஜ் பேக் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!