செவ்வாய் கிரக பணிக்காக ஆட்சேர்ப்பு, நாசா அழைப்பு – முழு விவரங்கள் இதோ!

0
செவ்வாய் கிரக பணிக்காக ஆட்சேர்ப்பு, நாசா அழைப்பு - முழு விவரங்கள் இதோ!
செவ்வாய் கிரக பணிக்காக ஆட்சேர்ப்பு, நாசா அழைப்பு - முழு விவரங்கள் இதோ!
செவ்வாய் கிரக பணிக்காக ஆட்சேர்ப்பு, நாசா அழைப்பு – முழு விவரங்கள் இதோ!

செவ்வாய் கிரகத்தில் ஒரு வருட கால பணிக்கு ஆள்சேர்ப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. அதன் படி செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள நான்கு விண்ணப்பதாரர்களை அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

நாசா ஆள்சேர்ப்பு

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் ஒரு வருட பணிக்கு ஆள்சேர்ப்பு செய்து உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் ஆய்வு வாழ்விடத்தில் பணிகளை மேற்கொள்ள நான்கு விண்ணப்பதாரர்களை தேடி வருகிறது. அதாவது செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பி, அதன் எதிர்கால வாழ்க்கை பயணங்களின் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். அறிவிக்கப்பட்டபடி ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் 1,700 சதுர அடி செவ்வாய் வாழ்விடமான மார்ஸ் டியூன் ஆல்பாவில் புதிய பங்கேற்பாளர்களுக்கான விண்ணப்பங்களை நாசா எடுக்கத் தொடங்கியது.

JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 11 வரை அனுமதி!

மேலும் செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால பயணங்களின் சவால்களை இவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என நாசா ஆய்வு செய்ய இருப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் செவ்வாய் கிரக பயணத்தின் சவால்களை உருவகப்படுத்தும் குழுப் பணிகளில் அதாவது விண்வெளி நடைப்பயணங்கள், அறிவியல் ஆராய்ச்சி, ரோபோ கட்டுப்பாடுகள் மற்றும் தகவல் தொடர்புகளை பரிமாறிக்கொள்ளும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த பயணத்தை நாசா மூன்று வகையாக திட்டமிட்டுள்ளது.

அதன் படி குழு ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் ஆய்வு என்று அழைக்கப்படும் முதல் பயணம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 க்குள் தொடங்குகிறது. அதாவது செவ்வாய் கிரகத்தில் வாழும் சிக்கலான வாழ்க்கைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சோதனைகளுக்கு அனலாக் மிகவும் முக்கியமானது என்று நாசாவின் மேம்பட்ட உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி முயற்சியின் முன்னணி விஞ்ஞானி கிரேஸ் டக்ளஸ் தெரிவித்துள்ளார். இப்பயணத்திற்கு விண்ணப்பிக்க சில தகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றின் படி, இதில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் விண்ணப்பதாரர்கள் அமெரிக்க குடிமக்கள் அல்லது 30 முதல் 55 வருட நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே ஆகும். தேர்வுக்கான மற்ற அளவுகோல்களின் கீழ் ஆங்கிலத்தில் தேர்ச்சி, நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்க கூடாது. தவிர கல்வி தகுதியை பொறுத்தவரை ஒரு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து பொறியியல், கணிதம் அல்லது உயிரியல், இயற்பியல் அல்லது கணினி அறிவியல் போன்ற படிப்புகள் அல்லது STEM துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கூடுதலாக, STEM இல் முனைவர் பட்டப் படிப்பில் இரண்டு வருட அனுபவம் உள்ளவர்கள் அல்லது மருத்துவப் பட்டம் பெற்றவர்கள், அல்லது ஒரு சோதனை பைலட் ஆகிய தகுதியுடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட உள்ளன. இது தவிர நான்கு வருட தொழில்முறை அனுபவத்துடன், STEM துறையில் ராணுவ அதிகாரி பயிற்சி அல்லது இளங்கலை அறிவியல் முடித்த விண்ணப்பதாரர்களது விண்ணப்பமும் பரிசீலனை செய்யப்படும் என என்று நாசா அறிக்கை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!