Paytm-யில் இனி UPI சேவை கிடையாது – ரிசர்வ் வங்கி விளக்கம்!

0
Paytm-யில் இனி UPI சேவை கிடையாது - ரிசர்வ் வங்கி விளக்கம்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank) பிப்ரவரி 29ம் தேதி முதல் Paytm Payment-ன் பரிவர்த்தனை தவிர மற்ற செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விளக்கம்:

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமான Paytm Payment-ன் செயல்பாடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank) புதிய உத்தரவு ஒன்றை விதித்தது. இதன் படி, Paytm Payment-ன் பண பரிவர்த்தனை தவிர வாலட்டில் பணம் சேர்ப்பது, FASTags மற்றும் பிற வங்கிகளில் டெபாசிட் மற்றும் டாப் – அப் செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு UPI Id மூலம் வழக்கம் போல் Paytm செயல்படுமா என அச்சம் எழுந்தது. இவை அனைத்திற்கும் இந்திய ரிசர்வ் வங்கி வங்கி ஆனது தற்போது விளக்கம் அளித்துள்ளது.

Paytm மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கு KYC விதிமுறைகளை சரிவர பின்பற்றாததும், Paytm செயல்பாடுகளில் விதி மீறல்கள் உள்ளதும், இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் முக்கிய காரணமாகும் என RBI வங்கி பதிலளித்துள்ளது. மேலும் Paytm மூலம் புதிய கணக்கை தொடங்கவோ, வாலட்டில் பணம் சேமிக்கவோ, பிரிபெய்ட் வசதிகளை பெறவோ, பாஸ்டேக் போன்ற சேவைகளை மட்டுமே பிப்ரவரி 29ம் தேதி முதல் பெற இயலாது எனவும் கூறியுள்ளது. ஆனால் UPI மூலமான பண பரிவர்த்தனைக்கு தடை கிடையாது எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த UPI சேவையை பெற பயனர்கள் தங்களது வங்கி கணக்குகளில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என Paytm உறுதியளித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!