தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் – போக்குவரத்து துறை தகவல்

0
தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் - போக்குவரத்து துறை தகவல்

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்து:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை அன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு அரசு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

அதில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை அன்று 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 140 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!