காவல்துறை பணிக்கு தேர்வானோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு மாற்று தேதி அறிவிப்பு!

0
காவல்துறை பணிக்கு தேர்வானோர் கவனத்திற்கு - உடற்தகுதித்தேர்வு மாற்று தேதி அறிவிப்பு!
காவல்துறை பணிக்கு தேர்வானோர் கவனத்திற்கு - உடற்தகுதித்தேர்வு மாற்று தேதி அறிவிப்பு!
காவல்துறை பணிக்கு தேர்வானோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு மாற்று தேதி அறிவிப்பு!

புதுச்சேரியில் காவல்துறை பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதி தேர்வு:

தமிழக காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் (TNUSRB) தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கடந்த 2021 ஆண்டு ஜூலை மாதம் முன்னேற்பாடு பணிகளுடன் நடைபெற்று முடிந்தது. பிறகு உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று தகுதியானவர்கள் தேர்த்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் நடப்பாண்டில் காவல்துறையில் 10,000 பேர் புதிதாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரியில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு முடிவு – கல்வித்துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் காவல்துறையில் காலியாக உள்ள 431 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி முதல் புதுச்சேரியில் உள்ள காவல்துறை விருந்தினர் மாளிகையில் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சில விண்ணப்பதாரர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்களுக்கு உடல்தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் உடல்தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், மீன்சந்தையில் அலைமோதிய மக்கள் – கொரோனா பரவும் அபாயம்!

அதன்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களின் கொரோனா சான்றிதழை ஸ்கேன் செய்து உடனடியாக புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆள்சேர்ப்பு பிரிவுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான மாற்றுத் தேதி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மின்னணு ஊடகம், மின்னஞ்சல் மூலம் தனித்தனியாக அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!