உங்கள் கணக்கில் PF பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா? – எளிய வழிமுறைகள்!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் செலுத்தப்படும் ஓய்வூதிய தொகை தெரிந்து கொள்வது பற்றிய முழு விவரங்களும் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் பேலன்ஸ்:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாதம்தோறும் குறிப்பிட்ட சதவீதம் தொகை சம்பளப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படுகிறது. இதை ஊழியர்களின் ஓய்வு காலத்தில் அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பு தொகையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் உங்கள் பிஎப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள இரண்டு வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
UAN மூலம் பி எப் இருப்பை சரிபார்க்கும் வழிமுறைகள்:
- முதலில் உங்கள் இபிஎப்ஓ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் know EPF balance என்பதை தேர்வு செய்து, epfoservices.in/epfo/ என்ற பக்கத்தில் உள்ள உறுப்பினர் இருப்பு தகவலை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி மற்றும் கேப்சாவை பதிவிட வேண்டும்.
- இதன் பின்னர் SUBMIT பட்டனை கிளிக் செய்தால் உங்கள் PF தொகை திரையில் தோன்றும்.
தமிழகத்தில் நியமனத்தேர்வு ரத்து?? – மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்!!!
UAN இல்லாமல் PF பேலன்ஸ் சரிபார்க்கும் வழிமுறைகள்:
- முதலில் இ பி எஃப் ஓ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் சேவைகள் பிரிவில் பணியாளர்கள் விருப்பத்தை தேர்வு செய்து யூ ஏ என் சேவையை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் உங்களது மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட்டு ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- இதன் பிறகு பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும். இதன் பிறகு உங்களின் UAN திரையில் தோன்றும்.
- இதனைக் கொண்டு உங்களது பிஎஃப் தொகையை சரி பார்த்துக் கொள்ள முடியும்.