Paytm வங்கி சேவைகளுக்கு மறுவாய்ப்பு? RBI முக்கிய அறிவிப்பு!

0
Paytm வங்கி சேவைகளுக்கு மறுவாய்ப்பு? RBI முக்கிய அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியானது பேடிஎம் பேமென்ட் வங்கி தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

RBI அறிவிப்பு:

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. அந்த வகையில், ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியான பேடிஎம் பேமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான Paytm பேமெண்ட் வங்கிகள் ஒழுங்காற்று விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு Paytm பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெறுவதற்கு ஆர்பிஐ தடை விதித்துள்ளது. ஆனால், Paytm online transaction செயல்பாடுகளில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக பேடிஎம் பேமெண்ட் வங்கியின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், நிறுவனத்தின் மீதான முதலீடுகள் குறைந்து சரிவு நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், ஆர்பிஐ நிதி சார்ந்த அமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை முழுமையான ஆய்வுகளுக்கு பின்னரே எடுக்கப்படும் எனவும், பேடிஎம் மீதான நடவடிக்கையை மறு ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை எனவும் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!