“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வரும் வெங்கட் மற்றும் சரவண விக்ரம் இணைந்து செய்த படப்பிடிப்புத் தள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு குடும்ப சீரியலாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி என பலர் நடித்து வருகின்றனர். ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் சந்தோசங்கள், கஷ்டங்கள் என அதை மையமாக வைத்து கதை சென்று கொண்டிருக்கிறது. மேலும் என்ன பிரச்சனை வந்தாலும் ரத்த சொந்தம் நிலையானது என்பதை இந்த சீரியல் அடிக்கடி உணர்த்தி இருக்கிறது.

கணவரின் பெயரை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ‘பிக் பாஸ்’ பிரபலத்தின் மனைவி – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் இந்த சீரியலில் லட்சுமி அம்மா இறப்பில் நிஜத்தை மிஞ்சுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டது. அதே போல அண்ணி வளைகாப்பு, கயல் பாப்பா காது குத்து என பல நிகழ்ச்சிகள் நிஜ வாழ்க்கையை போலவே எடுக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம். லட்சுமி அம்மா இறந்ததும் கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் மொட்டை அடித்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். அதனால் அவருக்கு பலரது பாராட்டுக்கள் குவிந்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ தாமரை பற்றி இதுவரை யாரும் அறியாத உண்மைகள் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தற்போது ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் மற்றும் கண்ணன் கதாபாத்திரத்தில் அடிக்கும் சரவண விக்ரம் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மேளதாளம் சத்தம் கேட்க படப்பிடிப்பை மறந்து வெங்கட் நடனம் ஆடுகிறார். அவருடன் கண்ணனும் சேர்ந்து ஆட ‘இந்த சத்தம் கேட்டாலே உடம்பு அதுவே ஆடுகிறது’ என தெரிவிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் அடிக்கும் லூட்டி வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!