Home Blog Page 9818

தேர்வு மாதிரி – TANGEDCO உதவி பொறியாளர்

 தேர்வு மாதிரி – TANGEDCO உதவி பொறியாளர் :

TANGEDCO  உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது . TANGEDCO  உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரி கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு  தயாரிப்பிற்கு  மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம் .

 

Sno Exam Type Part Subject Name No of Questions Max Marks Exam Duration
1. Written Test I Engineering Mathematics 20 20 2 Hours
II Basic Engineering & Sciences 20 20
III Concerned Discipline 60 60
Total 100 100

  • TANGEDCO  – உதவி பொறியாளர் தேர்வு  புறநிலை கேள்விகளை (objective questions) கொண்டிருக்கும் .
  • TANGEDCO –  உதவி பொறியாளர் தேர்வு 100 கேள்விகள் கொண்டது.
  • TANGEDCO –  உதவி பொறியாளர் தேர்வு 100 மதிப்பெண்களை கொண்டது .
  • தேர்வு நேரம் – 2 மணி நேரம் .

TANGEDCO ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி

TANGEDCO ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி:

TANGEDCO  தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் Assistant Engineer (Electrical) and (Civil) தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்பட்டது.  Assistant Engineer (Electrical) and (Civil) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று 06.03.2018 கடைசி நாள் ஆகும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கடைசி நேர தாமததை தவிர்த்து விண்ணப்பிக்கவும்.

TANGEDCO  Assistant Engineer (Electrical) and (Civil) Notification – 2018

UPSC Civil  தேர்வு 2018 – கடைசி தேதி

UPSC Civil  தேர்வு 2018 – கடைசி தேதி:

 UPSC (Union Public Service Commission) தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் Civil Service (Prelims) தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்பட்டது. மொத்த பணியிடங்கள் 782Civil Service (Prelims)  தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (06.03.2018) கடைசி நாள் ஆகும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கடைசி நேர தாமததை தவிர்த்து விண்ணப்பிக்கவும்.

UPSC Civil Service (Prelims) Exam அறிவிக்கை -2018

மார்ச் 3 & 4 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

புதுவைக்கு திட்டங்கள் அறிவிக்காததால் மோடி மீது மக்கள் அதிருப்தி: நாராயணசாமி

  • புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய பயணத்தின் போது, யூனியன் பிரதேசத்திற்கான எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் அறிவிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன

  • உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சென்னையில் தெரிவித்தார்.

சென்னைக்கு வீராணம் ஏரி நீர் குறைப்பு

  • வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக சரிந்துவருவதால், சென்னைக்கு அனுப்பப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

ஐசிஎப் நிறுவனம் தயாரித்த புதிய வகை மின்சார ரயில்களுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு

  • தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தில் புதிதாக இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 3 புதிய ரயில் கள் இணைக்கப்பட உள்ளன.
  • காலத்துக்கு ஏற்றவாறு ரயில்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இயங்கும் முக்கிய ரயில்களில் பழைய ரயில் பெட்டிகளுக்கு பதிலாக சொகுசு வசதி கொண்ட எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
  • இதேபோல், புதிய வகை மின்சார ரயில்களை இயக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தியா

தும்கூரு மாவட்டத்தில் கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா தொடக்கம்

  • உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி ( சோலார்) மின் பூங்கா கர்நாடகாவில் ரூ.16,500 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • கர்நாடக அரசின் முயற்சியாலும், 5 கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்

  • திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு 25 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து இறங்குகிறது.
  • அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார்.

25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது

  • திரிபுரா சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
  • 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
  • நாகாலாந்து, மேகாலயாவில் யாருக் கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளது.

உலகம்

ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

  • ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது.
  • அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. உலகின் எந்த மூலையையும் தாக்கும் திறன் கொண்டது.
  • ரஷ்யாவின் தற்காப்புக்காகவே இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

‘விண்வெளியில் மூவிழிகள்’: பயங்கர சூறாவளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் சூப்பர் செயற்கைக் கோள்- நாசா வெற்றிகரம்

  • உலகிலேயே அதிதொழில்நுட்ப வானிலை ஆய்வு செயற்கைக் கோளை நாசா விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.
  • இதன் மூலம் மேற்கு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பெரும்புயல்கள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை இனி துல்லியமாகக் கணிக்க முடியும் என்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்.
  • 11 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்த உயர் தொழில்நுட்ப விண்கலம் நாசாவின் 2வது முயற்சியாகும்.

உலக வனவிலங்குகள் தினம்- விலங்குகளை பாதுகாப்போம்

  • கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற 68வது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் அரிய வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து, மார்ச் 3-ம் தேதியை ‘உலக வனவிலங்குகள்’ தினமாக ஐ.நா அறிவித்தது.

துபாய் புளூ வாட்டர் தீவில் உருவாகும் உலகிலேயே பெரிய ராட்டினம்

  • துபாய் ஜுமைராவில் அய்ன் துபாய் (பழைய துபாய் 1 பகுதி) எனப்படும் பகுதியில் துபாய் ஆட்சியாளர்  ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவின்படி 1.6 கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ‘புளூ வாட்டர் தீவு’ என்ற பெயரில் செயற்கை தீவு அமைக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் எம்.பி.யாக தேர்வு

  • சிந்து மாநிலத்தில் நடந்த எம்.பி தேர்தலில் பெண்களுக்கான பிரிவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண குமாரி கோல்ஹி (வயது39) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் சார்பில் ஒரு பெண் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது மிகப் பெரிய மைல்கல்லாகும்.

வணிகம்

அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை

  • இறக்குமதி வரி விதிப்பை அதிகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவால் இந்தியாவில் உடனடி தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்று இந்திய உருக்குத் துறைச் செயலர் அருணா ஷர்மா தெரிவித்துள்ளார்.

சிஐஐ-க்கு புதிய நிர்வாகிகள்

  • இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டலத்தின் தலைவராக வி.ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் ரூ.4,843 கோடி நிதி திரட்டியது

  • சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது.
  • இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.
  • அமேசான், அலிபாபா போன்ற ஆன்லைன் போட்டியாளர்களை சமாளிக்க இந்த நிதியை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு

ஐபில் போட்டி: தமிழருக்கு 2-வது மகுடம்

  • ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2018-ம் ஆண்டு சீசனில் கேப்டனாக தமிழரும், சென்னையைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி

  • அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கித் தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.

PDF Download

SSC ஆட்சேர்ப்பு 2018 – 1330 SI & ASI பணியிடங்கள்

SSC ஆட்சேர்ப்பு 2018 – 1330 SI & ASI பணியிடங்கள்:

ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) SI & ASI ஆகிய பதவிகள் அடங்கிய 1330 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02-04-2018க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 1330

பணியிடத்தின் பெயர்: Sub Inspector, Assistant Sub Inspector.

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2018 அன்று 20 வயதிற்கும் 25 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது  விண்ணப்பதாரர்கள் 02.08.1993 பின்பும், 01.08.1998 க்கு முன்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். OBC வகுப்பினர் 3 ஆண்டுகளுக்கும், SC/ST வகுப்பினர் 5 ஆண்டுகளுக்கும் வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு  (Any Degree) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் Written Exam Paper-I , II, PST (Physical Standard Test), PET (Physical Endurance Test ), DME (Detailed Medical Examination) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 100/-

SC, ST,  மகளிர் ,Ex-Serviceman – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( http://www.ssc.nic.in/) 03-03-2018 முதல் 02-04-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி  05-04-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்  03-03-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்  02-04-2018
தேர்வு தேதி – Paper I 04/6/2018 to 10/6/2018 
தேர்வு தேதி – Paper II 01-12-2018

முக்கிய இணைப்புகள் :

[table id=43 /]

SSC CHSL – தேர்வு நுழைவுச்சீட்டு

SSC CHSL – தேர்வு நுழைவுச்சீட்டு :

SSC யின்  Combined Higher Secondary Level (10+2) Examination-2017 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  , தேர்வாணையம் இணைதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிட்டுள்ளது . விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CHSL தேர்வு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (For All Reegion) :

[table id=42 /]

 

மார்ச் 2 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

காவிரி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நிதின் கட்கரி மீது வழக்குப் பதிவு: வைகோ பேட்டி

இந்த ஆண்டு கோடையில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

  • இந்த ஆண்டு கோடை காலத்தில், முந்தைய ஆண்டுகளில் நிலவிய வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக (0.5 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை; முகாந்திரம் இருந்தால் விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்யலாம்: 

  • தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்ததாக விஜயேந்திரர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

நிர்பயா நிதியத்தில் இருந்து பெண்களின் பாதுகாப்புக்காக ரூ.2,900 கோடி அனுமதி:

  • நிர்பயா நிதியில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,900 கோடி மதிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்கள் பயன் அடையும்.

பெண்கள் மட்டுமே பணிபுரியும் பிராங்கிபுரம் ரயில் நிலையம்

  • ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. குண்டூர் – நர்சரோபேட் வரையில் உள்ள இடங்களை உள்ளடக்கி பிராங்கிபுரம் ரயில் நிலையத்துல் ஸ்டேஷன் மாஸ்டர், பயணசீட்டை சரிப்பார்பவர் என அனைவரும் பெண்கள்தான்.
  • ஜெப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம், இந்தியாவின் மாடுங்கா ரயில் நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மூன்றாவது ரயில் நிலையமாக பிரங்கிபுரம் உள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: கவுதம் அதானியின் சொத்துக்கள் ஓர் ஆண்டில் ரூ.92 ஆயிரம் கோடியாக உயர்வு

  • நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான கவுதம் அதானியின் சொத்துக்கள் கடந்த ஓர் ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
  • அவரின் தொழில், வர்த்தகம் 109 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று ஷாங்காய் நகரில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஹருன் குளோபல் இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம்

புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை: 

  • புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீன் வரதராஜனுக்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

சீனாவில் ‘ N ‘ எழுத்தை உபயோகிக்க தடை: சர்வாதிகாரியாகிறாரா ஜி ஜின்பிங்?

  • சீனாவில் ’ N ’என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
  • அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சிக்கும் ‘ N ‘ எழுத்துகளை தடை விதிக்கும் நோக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • N எழுத்துடன் ‘Ten thousand years’, ‘Disagree’ , Xi Zedong’ ‘Shameless’, ‘Lifelong’ , ‘Personality cult’ , ‘Emigrate , ‘Immortality’ ஆகிய வார்த்தைகளும் சீனாவில் சமூக வலைதளங்களில் உபயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் தொடர்பு தலைவர் ராஜினாமா

  • அமெரிக்க அதிபர் மாளிகையின் தகவல் தொடர்பு துறைத் தலைவராக பணியாற்றிய ஹோப் கிக்ஸ் (29) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வணிகம்

அமெரிக்காவில் இரும்பு, அலுமனியத்திற்கு இறக்குமதி வரி கடும் உயர்வு: ட்ரம்ப் அதிரடி உத்தரவு

  • அமெரிக்காவில் உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை, அதிபர் ட்ரம்ப் கடுமையாக உயர்த்தியுள்ளார்

பிப்ரவரியில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி

  • ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனங்களான மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்றவை உள்நாட்டு வாகன விற்பனையில் கடந்த பிப்ரவரியை விட இந்த பிப்ரவரியில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன.

விளையாட்டு

பயிற்சி ஆட்டத்தில் கெய்ல், சாமுவேல்ஸுடன் மே.இ.தீவுகள் கடும் சொதப்பல்… ஆனாலும் வெற்றி

  • ஹராரேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2019 தகுதிச் சுற்றுப் பயிற்சி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியிடம் 115 ரன்களுக்குச் சுருண்ட மே.இ.தீவுகள் பிறகு ஸ்பின்னர்களின் பந்து வீச்சினால் அந்த அணியை 83 ரன்களுக்குச் சுருட்டி போராடி வெற்றி பெற்றது.

PDF Download

வரலாற்றில் இன்று – மார்ச் 3

வரலாற்றில் இன்று – மார்ச் 3

மார்ச் 3

  • கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும்.
  • நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள்.
  • ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
  • 1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
  • 1857 – பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
  • 1878 – ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.
  • 1905 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
  • 1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • 1938 – சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1939 – மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
  • 1966 – பிரித்தானிய போயிங் 707 பயணிகள் விமானம் ஒன்று ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
  • 1971 – இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
  • 1974 – பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1974 – லூத்தரன் சபைகளுல் சில கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தன.
  • 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
  • 1992 – பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
  • 2002 – சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

பிறப்புகள்

  • 1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இறப்பு – 1922)
  • 1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இறப்பு – 2014)
  • 1944 – ஜெயசந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
  • 1950 – திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.
  • 1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இறப்பு – 2002)
  • 1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்
  • 1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி
  • 1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை

இறப்புகள்

  • 1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பிறப்பு – 1618)
  • 1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர்
  • 2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பிறப்பு – 1930)
  • 2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பிறப்பு – 1929)
  • 2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பிறப்பு – 1962)

சிறப்பு நாள்

 

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சிவகங்கை ஆட்சேர்ப்பு 2018 – 63 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சிவகங்கை ஆட்சேர்ப்பு 2018 – 63 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் :

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை (TNAHD) உதவியாளர் பதவியில் 63 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.03.2018 அன்று 5.45 pm  மணிக்கு முன்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 63

பணியிடத்தின் பெயர்:-  கால்நடை பராமரிப்பு உதவியாளர் 

வயது வரம்பு:   மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/07/2015 அன்று அருந்ததியர் ,தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்18 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராகவும் , BC, BC(muslims), MBC  விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 32 வயத்திற்கும் இடைப்பட்டவராகவும் பொது பிரிவினர் 18 – 30 வயதிற்கு இடைப்பட்டவராகவும் இருக்க வேண்டும் .

கல்வித்தகுதி:விண்ணப்பதாரர்கள்  10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இன சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்க படுவார்கள்

முக்கிய நாட்கள் :  

விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி – 31.03.2018 (பி. ப 5.45 மணிக்குள்).

முக்கிய இணைப்புகள்:

[table id=41 /]

இந்திய வங்கி ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி 

இந்திய வங்கி ஆட்சேர்ப்பு 2018 – கடைசி தேதி 

இந்திய  வங்கியின் (Indian Bank chennai)  மூலம் நடத்தப்படும் Clerk/ Officer பதவிற்கு  அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்த பணியிடங்கள் 21Clerk/ Officer பதவிற்கு விண்ணப்பிக்க இன்று 03.03.2018 கடைசி நாள் ஆகும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கடைசி நேர தாமததை தவிர்த்து விண்ணப்பிக்கவும்.