பத்ம விருதுகள் 2022 பரிந்துரை – செப்டம்பர் 15 கடைசி நாள்!!

0
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/06/பத்ம-விருதுகள்-2022-பரிந்துரை-செப்டம்பர்-15-கடைசி.jpg
பத்ம விருதுகள் 2022 பரிந்துரை - செப்டம்பர் 15 கடைசி நாள்!!
பத்ம விருதுகள் 2022 பரிந்துரை – செப்டம்பர் 15 கடைசி நாள்!!

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் 2022 ஆம் ஆண்டுக்கான குடியரசு விழாவில் வழங்க பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பத்ம விருதுகள்:

குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூக சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எஸ்எச்ஜி 95 புதிய ரக முகக்கவசம் அறிமுகம் – மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை வெளியீடு!!

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்க ஆன்லைன் மூலம் பெயர்களை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த பரிந்துரைகள் வழங்க கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும்.

TN Job “FB  Group” Join Now

https://padmaawards.gov.in என்ற இணையதளம் மூலமாக இந்த விருதுக்கான பரிந்துரைகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகளை “மக்கள் பத்ம விருது” என மாற்றம் செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே அனைத்து குடிமக்களும் வேட்புமனுக்கள், சுய நியமனம் உள்ளிட்ட பரிந்துரைகளை செய்யுமாறு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!