Home news தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரசுக்கு கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டது.

ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. கடந்த 2003 ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதன்படி இனி ஓய்வூதியம் கிடையாது. பணிக் காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பணிக்கு பின் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பிற பணப் பலன்களை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நாளை (மார்ச் 18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனை எதிர்த்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முக ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது.

இதில் பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தி.மு.க.,வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here