தமிழக திருக்கோயில்களில் உண்டியல் எண்ணிக்கை விவகாரம் – அறநிலையத்துறை ஆணையரின் முக்கிய உத்தரவு!

0
தமிழக திருக்கோயில்களில் உண்டியல் எண்ணிக்கை விவகாரம் - அறநிலையத்துறை ஆணையரின் முக்கிய உத்தரவு!
தமிழக திருக்கோயில்களில் உண்டியல் எண்ணிக்கை விவகாரம் - அறநிலையத்துறை ஆணையரின் முக்கிய உத்தரவு!
தமிழக திருக்கோயில்களில் உண்டியல் எண்ணிக்கை விவகாரம் – அறநிலையத்துறை ஆணையரின் முக்கிய உத்தரவு!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையை கோயிலின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

யூடியூப் சேனல்:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 36,488 கோயில்கள் இயங்கி வருகின்றது. இத்திருக்கோயில்களை முறையாக பராமரிக்கவும். கோயில்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் யூடியூப் சேனலில் உண்டியல் காணிக்கை குறித்து ஒளிபரப்பபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் 48 முதுநிலை கோயில் சார்பாக 48 முதுநிலை கோயில்களுக்கு தனித்தனியாக யூடியூப் சேனல்கள் இயக்கப்பட்டு வருகிறது.

TNPSC 2023 தேர்வுக்கான சிறந்த Study Material – குறைந்த விலைக்கு! Buy Now!

நேரடியாக கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை ஒளிபரப்பு செய்யப்படுவதை அந்தந்த மண்டல இணை ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!