Home news அதிர்ச்சி செய்தி.. மதுரைக்குள் நுழைந்த சீனாவின் கொரோனா வைரஸ் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

அதிர்ச்சி செய்தி.. மதுரைக்குள் நுழைந்த சீனாவின் கொரோனா வைரஸ் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

0
அதிர்ச்சி செய்தி.. மதுரைக்குள் நுழைந்த சீனாவின் கொரோனா வைரஸ் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!
அதிர்ச்சி செய்தி.. மதுரைக்குள் நுழைந்த சீனாவின் கொரோனா வைரஸ் - கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!
அதிர்ச்சி செய்தி.. மதுரைக்குள் நுழைந்த சீனாவின் கொரோனா வைரஸ் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

இந்தியாவில் தற்போது சில மாநிலங்களில் BF.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் சீனாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக சீனா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தற்போது BA.5 என்ற வைரஸ் உள் உருமாற்றம் அடைந்து BF.7 வைரஸாக மாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் BF.7 வைரஸ் கால் தடம் பதித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மதுரை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

டிச.29 தமிழக விவசாயிகள் குறைதீர் முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Exams Daily Mobile App Download

அதில் பிரதீபா (39) என்ற பெண் மற்றும் அவரது மகள் பிரத்தியங்கார ரிகா (6) ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதீபாவின் கணவர் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், தற்போது அவர் ஜெர்மனி சென்றுள்ளதால் இருவரும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இவர்களுடன் வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here