செப்.1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
செப்.1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செப்.1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
செப்.1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து மாநில அரசுகள் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க ஆயத்தமாகி உள்ளன. அந்த வகையில் மத்தியப் பிரதேச பள்ளிகள் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 முதல் ஆஃப்லைன் வகுப்புகள் 50% திறனில் செயல்பட உள்ளது.

Tamilnadu Govt Job Notification 2021 – 2022

அம்மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் அறிவிப்பின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளிலும் ஆஃப்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கும். ஏற்கனவே 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு 50% மாணவர்களுடன் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு வருகை கட்டாயமில்லை மற்றும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலும் அதே அணுகுமுறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

  • பள்ளிகளில் சமூக இடைவெளி மற்றும் பிற கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை. தங்கள் பெற்றோர்/பாதுகாவலர்களின் ஒப்புதலுடன் மட்டுமே ஆஃப்லைன் வகுப்புகளில் வந்து கலந்து கொள்ள முடியும். ஒப்புதல் இல்லாமல், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • அனைத்து ஊழியர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசியை செலுத்தி இருப்பது கட்டாயமாகும்.
  • மேலும் தூர்தர்ஷன் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பாடங்கள் தொடர்ந்து வீடியோவாக ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!