சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – அரசின் சூப்பர் தகவல்!

0
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – அரசின் சூப்பர் தகவல்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய விலையை அரசு உயர்த்தி உள்ளது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் மானியம்:

நாடு முழுவதும் மத்திய அரசு எல்பிஜி இறக்குமதியை பொறுத்து விலையை நிர்ணயித்து வருகிறது. இவற்றில் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இணைந்து மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டரை வழங்கி வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் சிலிண்டர் உபயோகத்திற்கான மானிய விலை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை ₹903 ஆகவும், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூபாய் 603 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 300 கூடுதல் மானியம் கிடைக்கும் என்று தெரிய வருகிறது. இதே போல் எல்பிஜி சிலிண்டர் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் காப்பீடு தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டு நுகர்வோருக்கு காப்பீடு தொகை அளிக்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் – வங்கி மூலம் வழங்கப்படாதது ஏன்?

அதன்படி சிலிண்டர் வெடித்து இறக்கும் நபரின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடும், விபத்து சம்பவங்களுக்கு ரூபாய் 30 லட்சம் வரையிலான மருத்துவ செலவுகளும், சொத்தில் சேதம் ஏற்பட்டால ஒரு நிகழ்விற்கு ரூபாய் 2 லட்சம் வரையிலும் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!