மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பட்டியல்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - 2022ம் ஆண்டிற்கான பட்டியல்!
மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - 2022ம் ஆண்டிற்கான பட்டியல்!
மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பட்டியல்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு வரும் 2022 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

விடுமுறை பட்டியல்

ஒவ்வொரு வருடமும் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் வார இறுதி விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், மாநில அரசின் பொது விடுமுறைகள் என ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 நாட்கள் வரை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு வரும் 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 48 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

அந்த வகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட மேற்கு வங்க மாநில அரசின் 2022ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியின் படி, பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 48 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாட்கள் குறித்து அரசுத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘கடனில் சிக்கியுள்ள மேற்கு வங்க மாநில அரசால் எங்களின் அகவிலைப்படியை உயர்த்த முடியவில்லை. எங்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி (DA) தொகை மத்திய அரசு ஊழியர்கள் சம்பாதிப்பதை விட 30% குறைவாக உள்ளது.

அமிர்தா குழந்தையின் உயிரை காப்பாற்றி தன் காதலை சொன்ன எழில், வீடு திரும்பிய கோபி – இன்றைய எபிசோட்!

அதனால்தான் எங்களுக்கு விடுமுறைகள் மூலம் அரசு இழப்பீடு அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற ஆண்டுகளை போலல்லாமல், 2022 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சரஸ்வதி பூஜை மற்றும் துர்கா பூஜைகளை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் அம்மாநிலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பூஜை விடுமுறைகள் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அந்த விடுமுறை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!