ஊதியத்துடன் கூடிய விடுமுறை வேண்டி கோரிக்கை – மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்!
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மாதவிடாய் விடுப்பு:
பெண்கள் மாதவிடாய் காலங்களில் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. நேற்று மாநிலங்களவையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது குறித்து பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை தேவையற்றது என தெரிவித்துள்ளார்.
கைரேகை மூலமாக ரூ.6000 நிவாரணம் வழங்க முடிவு – தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
மேலும் மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாக நான் இதை கூறுகிறேன், மாதவிடாய் காலங்களில் குறைந்த அளவிலான பெண்களே கடுமையான பாதிப்புக்கு உள்ளார்கள். இவை மருத்துவர்களால் சரி செய்யக் கூடியவை தான். அத்துடன் மாதவிடாய் என்பது ஒரு சுழற்சி தான் இது ஒரு குறைபாடு அல்ல பெண்களின் வாழ்வில் இயல்பானதே அதனால் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தேவையற்றது என விளக்கம் அளித்துள்ளார்.