பெண்களுக்கு மாதம் ரூ. 1500 ஓய்வூதியம் – அரசின் சூப்பர் திட்டம்!

0
பெண்களுக்கு மாதம் ரூ. 1500 ஓய்வூதியம் - அரசின் சூப்பர் திட்டம்!
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

ஓய்வூதிய திட்டம்

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு இன்று இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டத்தை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மூலம் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்து லாஹவுல் மற்றும் ஸ்பிட் பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2.37 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1500 ஓய்வூதியமாக வழங்கப்பட இருக்கிறது.

மேலும் பேசிய அவர் மாநிலத்தில் கடந்த ஆட்சியில் நிதி நிலைமை மோசமாக இருந்தது. தற்போது அதனை சரி செய்ய ‘வியாவஸ்தா பரிவர்தன்’ திட்டத்தின் கீழ், எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் 70.07 கோடி மதிப்பிலான 11 வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி இருக்கிறார். மேலும் 1.25 கோடி செலவில் கட்டப்பட்ட லாஹவுல்-ஸ்பிடி காவல்துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அவர் திறந்து வைத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!