சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ தொல்காப்பியன் – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் 'கோலங்கள்' தொல்காப்பியன் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் 'கோலங்கள்' தொல்காப்பியன் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ தொல்காப்பியன் – ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு, மக்களிடம் பிரபலமான கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தற்போது புதிய சீரியல் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

சன் டிவி சீரியல்:

அந்த காலத்தில் சீரியல் என்றாலே மக்களுக்கு ஞாபகத்திற்கு வருவது சன் டிவி சீரியல் தான். 90’ஸ் காலத்தில் சீரியல்கள் பல எபிசோடுகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. பல மறக்க முடியாத சீரியல்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த வகையில் 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் கோலங்கள். 6 ஆண்டுகளாக வெற்றிநடை போட்ட இந்த சீரியல் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

தனுஷின் வடசென்னை பட நடிகர் சூர்யகாந்த் கொரோனாவால் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!

அந்த சீரியலில் தேவயானி, தீபா வெங்கட், அபிஷேக் ஷங்கர், நளினி ஆகியோர் நடித்தனர். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் இயக்குனர் திருச்செல்வம் தான். அவருடைய கதை என்றாலே அது ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார். அவரும் இந்த சீரியலில் தொல்காப்பியன் என்ற கதாப்பாத்திரத்தில் தொல்ஸ் என்ற செல்லப் பெயருடன் நடித்திருந்தார். அவர் மேலும் இயக்கிய கைராசி குடும்பம், மாதவி போன்ற சீரியல்கள் அவருக்கு ஹிட் கொடுத்தது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை மாற்றம், உண்மையை சொன்ன அபிநயா – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் அவர் மீண்டும் புதிய சீரியல் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எதிர் நீச்சல் என்ற சீரியலை திருச்செல்வம் இயக்குகிறார். இந்த சீரியலில் தெய்வ மகள் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுப்பிரமணியன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் பெண்களை மையமாக வைத்தும் அவர்களை எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லலாம் என்பது குறித்து கதையுடன் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here