மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூப்பரான திட்டம் – கேரள அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூப்பரான திட்டம் - கேரள அரசின் அசத்தல் அறிவிப்பு!!
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூப்பரான திட்டம் - கேரள அரசின் அசத்தல் அறிவிப்பு!!
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூப்பரான திட்டம் – கேரள அரசின் அசத்தல் அறிவிப்பு!!

கேரள மாநிலத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் 2 சூப்பரான திட்டம் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

கேரள மாநிலத்தில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முறை மாணவர்களுக்கான 3-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இவர் தெரிவித்துள்ளதாவது, Young Innovators Programme மற்றும் Industry on Campus Scheme ஆகிய திட்டங்கள் மாணவர்களுக்கு படிக்கும் போது வேலைவாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் Smart City திட்டம் – 22 நகரங்களில் பணிகள் இறுதி கட்டம்.. அதிகாரிகள் தகவல்!!

Follow our Instagram for more Latest Updates

அதன்படி மாணவர்கள் படிப்புடன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் Young Innovators Programme என்ற திட்டம் மூலமாக தொழில் துறையில் இருக்கும் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான தயாரிப்புகள், சேவைகள் அல்லது மாடல்களை புதுமைப்படுத்துவதற்கான கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க பெரிதும் உதவி புரியும்.

இது மட்டுமல்லாமல், மற்ற படிப்புகளுக்கும் கட்டாயப் பயிற்சி முறை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்கள் படிக்கும் போது சம்பாதிக்க உதவுவதற்கு “கர்மாச்சாரி” என்ற திட்டத்தை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார். இந்த திட்டம் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செயல்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!