நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கியமான நாட்கள்

ஜூலை 26 – கார்கில் விஜய் திவாஸ்

 • கார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 1999ல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தேசிய செய்திகள்

புது தில்லி

பாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்

 • தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முன்மொழியப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்/பாலியல் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள்/பிற குற்றங்கள் 2018ல் பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சர்வதேச செய்திகள்

இம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

 • முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் தனது தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ.) வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

வணிகம் & பொருளாதாரம்

வோடபோன், ஐடியா இணைப்ப்புக்கு DoT ஒப்புதல்

 • வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலர் இணைவதற்கு தொலைத்தொடர்புத் துறை அதன் இறுதி ஒப்புதலை அளித்தது.

சென்செக்ஸ் 37,000 புள்ளியைத் தொட்டது

 • சென்செக்ஸ் முதல் தடவையாக 37,000 புள்ளிகளுக்கு மேல் கடந்தது.

ஹிண்டால்கோ யூனிட் அலரிஸை 2.6 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கவுள்ளது

 • ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனமான அலரிஸ் கார்பரேஷனை 2.58 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டது, இது ஹிண்டால்கோ சீனாவை தவிர்த்து அலுமினியத்தில் ஒரு உலகளாவிய தலைவர் ஆக உதவும்.

இந்தியாவில் 2 தரவு மையங்கள் அமைக்கவுள்ளது NTT

 • ஜப்பானின் NTT கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன், நெட்மேஜிக் என்ற துணை நிறுவனம் மூலமாக மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு புதிய தரவு மையங்களை அமைக்கும் என்று அறிவித்துள்ளது.

மாநாடுகள்

6வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (SIC) கூட்டம்

 • புது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே S & T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தது.

10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்

தீம்:- Collaboration for Inclusive Growth and Shared Prosperity in the 4th Industrial Revolution

 • 10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.

இளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாடு

 • ராஜ்நாத் சிங் இளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாட்டை தொடங்கி வைத்தார். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் புதுமையான தீர்வுகளுக்காக கூட்டுறவு கொள்வதற்காக காவல்அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

திட்டங்கள்

சமக்ர சிக்ஷா

 • மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2018-19ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும்.

மகளிர் சக்தி மையம்

 • கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா வங்கதேசத்துடன் போர்க் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

 • கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் (GRSE), ஒரு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம், வங்கதேசத்தின் குல்னா ஷிப்யார்ட் லிமிடெட் (KSY) உடன் போர்க்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உதவுவதற்காக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டது.

ஆண்டுக்கு இரு முறை ஜே... மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள்: தேசிய சோதனை முகமை நடத்தும்

 • ஆண்டுக்கு இரு முறை உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளான கூட்டு நுழைவுத் தேர்வு (JEE- MAIN), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை (NEET) தேசிய சோதனை முகமை நடத்த மத்திய அமைசச்சரவை ஒப்புதல். இதன் மூலம் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படும்.

பாதுகாப்பு செய்திகள்

விமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு

 • கூட்டுப் போர் ஆய்வுகள் மையத்தால் (CENJOWS) ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் விமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ,ரக்ஷா ராஜ்ய மந்திரி (ஆர்ஆர்எம்) டாக்டர் சுபாஷ் பாம்ரே தொடங்கிவைத்தார்.

விருதுகள்

கலாச்சார வளங்களின் மையம் மற்றும் பயிற்சி மையம்

 • 2016-17 க்கான சீனியர் பெல்லோஷிப் விருது – முகமது அயாசுதீன் படேல்

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

புதுமைப் படைப்பு இந்தியாதளம்

 • அடல் புதுமைப் படைப்பு இயக்கம், நிதி ஆயோக், “மைகவ்” ஆகியவை இணைந்து ”புதுமைப் படைப்பு இந்தியா ” தளத்தை தொடங்கின. இந்த தளம் நாடெங்கும் நடைபெறும் அனைத்து புதுமைப் படைப்புகளின் பொது மையமாக செயல்படும்.

விளையாட்டு செய்திகள்

உலக கோப்பை ஹாக்கி

 • பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி குழு லீக் போட்டியில் அயர்லாந்து இந்தியாவை 1-0 எனத் தோற்கடித்தது.

2018 பிபா உலக கோப்பை சிறந்த கோல்

 • அர்ஜென்டீனாவிற்கு எதிராக பெஞ்சமின் பவார்ட்’ன் [பிரான்ஸ்] கோல் [2006க்குப்பின் கொடுக்கப்பட்ட்ட இந்த பதக்கத்தை வென்ற முதல் ஐரோப்பிய வீரர்]
 • ஜப்பானுக்கு எதிராக ஜுவான் கினெர்டோவின் [கொலம்பியா] கோல்
 • லூகா மோடிரிக் [குரோஷியா] அர்ஜென்டினாவிற்கு எதிரான கோல்

 PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!