நடப்பு நிகழ்வுகள் ஜூலை 24 2018

0
214

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 24 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

தேசிய செய்திகள்

கேரளம்

முந்திரி துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது

 • பொதுத்துறை முந்திரி தொழிற்சாலைகளை ஒரு நவீன தயாரிப்பிற்கு அளிப்பதன் மூலம், அரசாங்கம் உற்பத்தி செய்வதை விரைவுபடுத்துவதோடு தொழிலாளர்களுக்கான அதிகபட்ச வேலை நாட்களையும் உறுதிப்படுத்துகிறது.

கர்நாடகம்

கர்நாடகாவில் அன்னிய நேரடி முதலீடு 300 சதவீதம் அதிகரித்துள்ளது

 • மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு (FDI) 300 சதவீதம் கர்நாடகாவில் அதிகரித்துள்ளது.

தைவான் நிறுவனம் கர்நாடகத்தில் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய உள்ளது

 • தைவான் நிறுவனமான விஸ்டிரோன் டெக்னாலஜிஸ் கோலாரின் நரசாபுரா தொழில்துறை பகுதியில் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய முன் வந்துள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப் சிறப்பு அந்தஸ்து நிலையை நாடுகிறது

 • பஞ்சாபில் போதைப்பொருட்களை கையாள்வதில் சிக்கல் நிலவுவதால் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பாதுகாப்பு மசோதாவின் கீழ் சிறப்பு அந்தஸ்தை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது பஞ்சாப் மாநில அரசு.

தமிழ்நாடு

ஸ்டான்லி நீர்த்தேக்கம் முழுத்திறனை அடைந்துள்ளது

 • மேட்டூரில் ஸ்டான்லி நீர்த்தேக்கம் அதன் முழு நீர்த்தேக்க நிலையான (FRL) 120 அடி உயரத்தை அடைந்தது, 39 வது தடவையாக அணை நீர்மட்டம் அதன் 85 ஆண்டு வரலாற்றில் முழுத் திறனை அடைந்துள்ளது. இதற்கு முன் ஆகஸ்ட் மாதம் 2013 ல் நடந்தது.

சர்வதேச செய்திகள்

ரோஹிங்கியா திரும்பும் நிலைமைகளை உருவாக்க மியான்மரை வலியுறுத்துகிறது ஐ.நா.

 • அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாதுகாப்பாக மியான்மருக்கு திரும்பி வருவதற்கான நிலைமைகளை உருவாக்குமாறு மியான்மரின் அரசாங்கத்தை ஐ.நா. பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

அறிவியல் செய்திகள்

மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக வேகமாக சுழலும் பொருள் உருவாக்கப்பட்டது

 • மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் வேகமான ரோட்டரை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள், இது குவாண்டம் இயக்கவியலைப்படிக்க உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
 • நிமிடத்திற்கு 60 பில்லியனுக்கும் அதிகமாக சுழலும், இந்த இயந்திரம் பல் துளையிடும் அதிவேகக்கருவியை விட 100,000 மடங்கு வேகமாக உள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

ருவாண்டாவிற்கு 200 மில்லியன் டாலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது

 • வர்த்தக மற்றும் விவசாய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ருவாண்டாவிற்கு 200 மில்லியன் டாலர் கடனை வழங்கியது இந்தியா.
 • ருவாண்டா ஜனாதிபதி – பால் ககாமே

இரயில்வேயின் உலகளாவிய டெண்டர் தொடங்கவுள்ளது

 • ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) இரயில் பாகங்கள் வழங்குவதற்கான பற்றாக்குறையை சந்திக்க இந்திய இரயில்வே 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இரயில் பாகங்களுக்கான உலகளாவிய ஒப்பந்தத்தில் தனியார் துறையும் பங்கேற்க அனுமதி.
 • தனியார் துறைக்கு இரயில் கொள்முதல் திறக்கப்படுவது மூன்று தசாப்தங்களில் இது முதன்முறையாகும்.

திட்டங்கள்

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர்ப்புற கழிவு உரத் திட்டம்

 • ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர்ப்புற கழிவு உரத் திட்டம் 2019-20 வரை தொடரும்.

ஸ்வச் சர்வேக்சன் கிராமீன்

 • 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் 2018 (SSG 2018), உத்திரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மக்களவையில் லஞ்ச ஊழல் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

 • லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் லஞ்சம் கொடுப்பவர்களை தண்டிக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்ட (திருத்தம்) மசோதா, 2018 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 • பொது அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்குவது அல்லது வழங்குவது போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த மசோதா மூலம் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

IOCL மற்றும் ALMICO இடையே ஒப்பந்தம்

 • UPSO-II (IOCL) சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ஊனமுற்றவர்கள் நன்மைக்காக 1 கோடி ரூபாய் அர்ப்பணிப்பு. UPSO-II இன் CSR திட்டத்தின் நோக்கம் ஊனமுற்றவர்களுக்கு அதிகாரமளிப்பதாகும்.

பாதுகாப்பு செய்திகள்

பிட்ச் பிளாக் விமானப்படை பயிற்சி – 18 

 • ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையுடன் பிட்ச் பிளாக் விமானப்படை – 18 பயிற்சியில் முதல் முறையாக இந்திய விமானப்படை பங்கேற்கிறது

விருதுகள்

11 வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் கேரளாவின் சிறு திரைப்பட விழா (IDSFFK)

 • ‘அப், டவுன் அண்டு சைடுவேஸ்’ – சிறந்த நீண்ட ஆவணப்பட விருது

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

சுசூகி கனெக்ட்

 • அவசர எச்சரிக்கை, வாகன கண்காணிப்பு மற்றும் கார் உதவி போன்ற சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான ஒரு தீர்வாக சுசூகி கனெக்டை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸுகி.

விளையாட்டு செய்திகள்

செப்டம்பர் 19 அன்று இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

 • ஆசியா கோப்பை போட்டியில் செப்டம்பர் 19 அன்று இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here