ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

0
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிப்பு! எளிய வழிமுறைகள் இதோ!
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜீவன் பிரமான் சான்றிதழ் சமர்ப்பிப்பு! எளிய வழிமுறைகள் இதோ!

ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழை சமர்பிப்பதற்கான இறுதி நாள் நெருங்கி விட்ட நிலையில், இந்த ஜீவன் பிரமான் பத்ரா சான்றிதழை ஆன்லைனில் எவ்வாறு சமர்ப்பிப்பது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

இறுதி நாள்:

ஜீவன் பிரமான் பத்ரா என்றும் அழைக்கப்படும் வாழ்க்கை சான்றிதழ்கள், ஓய்வூதியம் பெறுபவர்களின் இருப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆவணமாகும். குறிப்பிட்ட நபர்கள் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாக இந்த ஆவணம் செயல்படுகிறது. அரசு ஓய்வூதியம் பெறுவோர், தங்களுடைய ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30.

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – நவ.10 கடைசி நாள்!

சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான இணைய பக்கம் ஏற்கனவே அக்டோபர் 1 அன்று 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது, மேலும் நவம்பர் 1 ஆம் தேதி 80க்கு கீழ் உள்ளவர்களுக்கும் திறக்கப்படும். வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர் அல்லது ஏஜென்சியின் முன் இந்த சான்றிதழைக் காட்ட வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணத்திற்கு பிறகும் பணம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது. வாழ்க்கை சான்றிதழைச் சமர்ப்பிக்கும் ஓய்வூதியதாரர் ஆவணத்தை வழங்க விநியோக முகவர் முன் நேரில் செல்ல வேண்டும்.

ஆனால் 2020 ல் கொரோனா தொற்று பரவல் காரணமாக டிஜிட்டல் சான்றிதழ்களை (டிஎல்சி) அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், பல வழிகள் மூலமாகவும் ஜீவன் பிரமான் பத்ரா சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அந்த வழிமுறைகளை காண்போம்.

ஜீவன் பிரமான் போர்ட்டல்:
  • https://jeevanpramaan.gov.in/ இணையதளம் அல்லது செயலி வாழ்க்கை சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.
  • முதலில் ஜீவன் பிரமான் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் தங்கள் ஆதார் எண், ஓய்வூதிய கட்டண உத்தரவு, வங்கி கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த போர்டல் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக ஆதார் தளத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர் அடையாளத்திற்காக தங்கள் கைரேகையை சமர்ப்பிக்க வேண்டும்.
  • வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, ஜீவன் பிரமான் போர்டல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பும். அதன் மூலம் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
டோர்ஸ்டெப் பேங்கிங் அலையன்ஸ்:
  • வாழ்க்கைச் சான்றிதழ்கள் அல்லது ஜீவன் பிரமான் பத்ராவை 12 பொதுத்துறை வங்கிகளுக்கு இடையிலான கூட்டணியான வீட்டு வாசல் வங்கி (DSB) மூலமும் சமர்ப்பிக்கலாம். பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் இணைந்து செயல்படுகிறது.
  • முதலில், டோர்ஸ்டெப் பேங்கிங் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது https://doorstepbanks.com/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • தங்கள் வங்கியின் தேர்வில் சென்று வீட்டில் இருந்து வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்காக வங்கிச் சேவையைப் பெற தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்.
  • தனது ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிட்டு, அதை சரிபார்த்து, சேவைக்கு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
  • சமர்ப்பிப்பு செயல்முறையை முடிக்க வருகை தரும் வங்கி முகவரின் பெயரைக் குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறுபவருக்கு SMS அனுப்பப்படும்.
  • முகவர் நபரின் வீட்டிற்கு வந்தவுடன் இறுதியான செயல்முறைகள் முடிக்கப்படும்.
வீட்டில் தபால்காரர் மூலம் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பித்தல்:

இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், கடந்த ஆண்டு நவம்பரில் தபால்காரர் மூலம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தபால் துறையும் டோர்ஸ்டெப் சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில், ஓய்வூதியம் பெறுபவர் Postinfo செயலியை சமர்ப்பிக்க வேண்டும். இது ஒரு கட்டண சேவை மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களின் ஓய்வூதிய கணக்குகள் வெவ்வேறு வங்கிகளில் இருந்தாலும் கிடைக்கின்றது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!