ஐடி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிகரிக்கும் வேலைவாய்ப்பு – ஒரு அலசல்!

0
ஐடி ஊழியர்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு தளங்களின் தகவல் அடிப்படையில், ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு இருக்கும் துறையாக ஐடி துறை இருக்கிறது. இந்நிலையில் லிங்க்ட்இன் மற்றும் பிற முக்கியமான வேலைவாய்ப்பு தளங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐடி ஊழியர்கள் 82000 பணியிடங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இருந்த எண்ணிக்கையை விட இது அதிகம் ஆகும். இருந்தாலும் கடந்த 20 மாதங்களில் இந்திய ஐடித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது .

TNPSC தேர்வுக்கு குறைந்த செலவில் வீட்டில் இருந்தே படிக்கலாம் – முழு விவரம் உள்ளே!

சுமார் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான துறையில் காலியாக வெறும் 50000 பணியிடங்கள் மட்டுமே இருக்கிறது. மார்ச் காலாண்டில் நாட்டின் முதன்மை ஐ.டி சேவை நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணியமர்த்தல் விகிதம் முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது 4-6% குறைந்துள்ளது என ஸ்டாஃபிங் நிறுவனமான Xpheno தெரியவந்துள்ளது. 2025ஆம் நிதி ஆண்டிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், பெஞ்ச்-ல் இருக்கும் ஊழியர்களை குறைப்பது, ஆட்டோமேஷன்-ஐ அதிகரிப்பது, செயல்திறனை மேம்படுத்த இருப்பதாக ஐடி துறை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!