டாப் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் – ஃபோர்ப்ஸ் வெளியீடு!

0
டாப் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் - ஃபோர்ப்ஸ் வெளியீடு!
டாப் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் - ஃபோர்ப்ஸ் வெளியீடு!
டாப் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் – ஃபோர்ப்ஸ் வெளியீடு!

ஃபோர்ப்ஸ் இதழ் தற்போது முதல் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 6 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ஃபோர்ப்ஸ் பட்டியல்:

ஃபோர்ப்ஸ் என்பது மாதம் இருமுறை வெளியாகும் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் இதழாகும். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் பட்டியல்கள் அனைத்தும் மிகவும் பிரபலம். குறிப்பாக உலக பணக்காரர்களின் பட்டியல், அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்கள், உயரதிகாரிகள் சம்பளம், மிகப்பெரும் தனியார் நிறுவனங்கள் போன்றவை மிகவும் பிரபலமாக கவனிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடப்பாண்டிற்கான முதல் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக ஆறு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

அக்.9ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

அதன்படி, ஒபி ஜிண்டால் குழுமத்தை சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் 13.46 லட்சம் கோடி சொத்து மதிப்பை பெற்ற பெண்களில் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டை விட, இந்தாண்டு அவரின் சொத்து மதிப்பு 9.72 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இவர் பட்டியலில் 71வது இடத்தில் உள்ளார். அடுத்ததாக ஹேவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த இரண்டாவது பணக்கார பெண் தொழில்முனைவோராக உள்ள 76 வயதான வினோத் ராய் குப்தா சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 7.6 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட ரூபாய் 5.68 லட்சம் கோடி) உள்ளது. இவர் 24ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்ததாக மும்பையைச் சேர்ந்த மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட்டின் லீனா திவாரி பட்டியலில் 43 ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது (கிட்டத்தட்ட ரூ. 3.28 லட்சம் கோடி) ஆகும். ஒட்டுமொத்த பட்டியலில் 47 ஆவது இடத்தை பிடித்துள்ளவர் பைஜூஸ் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் ஆவார். கோகுல்நாத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 1 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூபாய் 7,477 கோடி) வளர்ந்து 4.05 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட ரூபாய் 3.02 லட்சம் கோடி) உள்ளது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.168 உயர்வு – மாலை நிலவரம்!

மேலும் பயோகானின் கிரண் மசும்தார் ஷா 2020 இல் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (கிட்டத்தட்ட 4 3.43 லட்சம் கோடி) சொத்து மதிப்பை கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டு அவருடைய நிகர சொத்து மதிப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக (கிட்டத்தட்ட ரூபாய் 2.91 லட்சம் கோடி) குறைந்துள்ளது. இதனால் பெண்களின் வரிசையில் 5வது இடத்தில் உள்ளவர், ஒட்டுமொத்த பட்டியலில் 53வது இடத்தில் உள்ளார். ஆறாவதாக, டிராக்டர்கள் அண்ட் ஃபார்ம் எக்விப்மென்ட் லிமிடெட் (TAFE) நிறுவனத்தின் உரிமையாளரான மல்லிகா சீனிவாசன், நிகர சொத்து மதிப்பு 2.89 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது (கிட்டத்தட்ட 16 2.16 லட்சம் கோடி) ஆகும். இவர் பட்டியலின் 73வது இடத்தில் உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!