10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு முறை, வயது வரம்பு விளக்கம்!

0
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு முறை, வயது வரம்பு விளக்கம்!
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு முறை, வயது வரம்பு விளக்கம்!
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு முறை, வயது வரம்பு விளக்கம்!

இந்தியன் மிலிட்டரி அகாடமியில் காலியாக இருக்கும் சில உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு

இந்தியாவில் கொரோனா 2ம் அலைப்பரவல் தொற்று ஓய்ந்திருக்கக்கூடிய சூழலில் பல்வேறு வகையான சேவைகளும் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் தற்போது காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியன் மிலிட்டரி அகாடமியில் குக் ஸ்பெஷல், MT டிரைவர், வெயிட்டர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை டேராடூன் இந்தியன் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்த பணிக்கான கல்வித்தகுதி, தேர்வு முறை, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை விரிவாக காணலாம்.

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் – 188

  • ஸ்பெஷல் குக் – 12
  • குக் IT – 3
  • MT டிரைவர் – 10
  • பூட் மேக்கர், பழுதுபார்ப்பவர் – 1
  • LDC – 3
  • மசால்ச்சி – 2
  • பணியாள் – 11
  • ஃபேட்டிக் மேன் – 21
  • MTS – 28
  • கிரவுண்ட்மேன் – 46
  • GC ஆர்டர்லி – 33
  • க்ரூம் – 7
  • பார்பர் – 2
  • உபகரணங்கள் பழுதுபார்ப்பவர் – 1
  • சைக்கிள் பழுதுபார்ப்பவர் – 3
  • ஆய்வக உதவியாளர் – 1
தகுதி:
  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்திருந்தால் அவர்களது மனைவிகள் உயிருடன் இருக்கக்கூடாது.
வயது வரம்பு:

MT டிரைவர்(OG), லேப் அட்டெண்டன்ட் மற்றும் GC ஆர்டர்லி பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 18 முதல் 27 வயது வரையும், மற்ற அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல் 25 என இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

சமையல்காரர், டிரைவர், பூட் மேக்கர் மற்றும் LDC ஆகிய பணிகளுக்கு மாத ஊதியம் ரூ.19900 முதல் ரூ.63200 வரையும், மற்ற பதவிகளுக்கு மாதம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

கட்டண விவரம்:

விண்ணப்பதாரர் ரூ.50 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை:
  • தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
  • இவை எழுத்து தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளை அடிப்படையாக கொண்டது.
  • இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தகுதித் தேர்வு நடைபெறும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!