முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 16

0

ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்

டிசம்பர் 19, 1994 அன்று, ஐ.நா பொதுச் சபை செப்டம்பர் 16 ஐ ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்தது, ஓசோன் அடுக்கை குறைக்கும் பொருள்களுக்கான மாண்ட்ரீல் நெறிமுறை 1987 இல் கையெழுத்திடப்பட்ட தேதியை இது நினைவுகூர்கிறது. இந்த நாள் முதலில் செப்டம்பர் 16, 1995 இல் கொண்டாடப்பட்டது.

நிகழ்வுகள்

  • 1978 – ஈரானில் டபாஸ் நகரை 7.5 – 7.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1982 – லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1987 – ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.
  • 2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
  • 2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
  • 2007 – தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி

ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி (Albert Szent-Györgyi, செப்டம்பர் 16, 1893 – அக்டோபர் 22, 1986) ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர். 1937 ஆம் ஆண்டு உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

1937 ஆம் ஆண்டின் மருத்துவ நோபல் பரிசினை “அவரது வைட்டமின் சி யுடன் ப்யூமெரிக் அமிலத்துடனும் சிறப்புத் தொடர்புடையதின் தூண்டுதலளிக்கும் உயிரியல் எரியூட்டு வழிமுறைகள் சம்பந்தப்பட்ட அவரது கண்டுபிடிப்புகளுக்கு” பெற்றார். அவர் மேலும் சிட்ரிக் அமிலத்தின் சுழற்சி பல கூறுகள் மற்றும் பிரதிபலிப்புகளை ஹான்ஸ் அடால்ஃப் க்ரெப்ஸ்சிடமிருந்து தனித்துக் கண்டறிந்தார்.

வைட்டமின் சி பற்றிய சிறப்பான குறிப்புகளுடனும் ஃபியூமரிக் அமிலத்தின் வினைவேகமாற்றத்துடனும் உயிரியல் ரீதியான ஆக்ஸிஜனுடன் எரிதல் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகளுக்காக” ஸெண்ட்-ஜிஆர்ஜிக்கு 1937 ஆம் ஆண்டின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து, 1975)
  • ஓசோன் படலப் பாதுகாப்புக்கான பன்னாட்டு நாள்
  • மலேசியா நாள் (மலேசியா, சிங்கப்பூர்)
  • மாவீரர் நாள் (லிபியா)

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!