முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 4 2018

0

மே 4 சர்வதேச தீயணைப்புப் படையினர் தினம்

  • வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கல்வித் திட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
  • இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் நிதி அமைச்சகமும், வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு தொடர்பான 4 ஆவது பிராந்திய மாநாடு பெங்களூரில் 04.05.2018 நிறைவடைந்தது.
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் அமைப்பின் 27-வது கூட்டம்05.2018 நடைபெற உள்ளது.
  • ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் எளிமையான முறைகளை செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
  • புவி தகவல் முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கங்கை புனரமைப்புப் பணியைச் செயல்படுத்துமாறு தூய்மை கங்கைக்கான தேசியச் செயல்திட்டம்,1767 இல் அமைக்கப்பட்ட மிகப் பழமையான அறிவியல் துறையான சர்வே ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளது.
  • வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக வருகிற 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
  • ரேபிஸ் நோயை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • நியூயார்க் நகர சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தீபா அம்பேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் அமெரிக்காவில் நீதிபதியாகியுள்ள இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையையும் தீபா அம்பேகர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக அமெரிக்காவில் 2015ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதம் மின்மயமாக்கலை இந்தியாவில் “மிகவும் நன்றாக” பயன்படுத்தப்படுகிறது என்று உலக வங்கி பாராட்டு தெரிவித்து உள்ளது.
  • இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2018 வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு
  • புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட 28 மருந்துகளுக்கான இறக்குமதி வரியை சீனா நீக்கியிருப்பதால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை குறைய வாய்ப்பு உள்ளது.
  • இன்ஜினில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக சமீபத்தில் 11 (ஏர்பஸ் ஏ320) விமானங்களை தனது சேவையிலிருந்து இண்டிகோ நிறுவனம் விலக்கிக்கொண்டது.
  • இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) நிறுவனத்தின் பங்குகள் 57 சதவீதம் சரிவு.
  • நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்
  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 3-வது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரியல் மாட்ரிட் சாதனை படைத்துள்ளது.
  • இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியை வீழ்த்தினால் தொடர்ச்சியாக 3-வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைக்கும்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!