TNPSC 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

0
TNPSC 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!
TNPSC 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!
TNPSC 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அரசு வேலை கிடைப்பதற்காக TNPSC தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளை நடத்த இருக்கிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை செலுத்துவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 28 ஆகும்.

TNPSC குரூப் 4

தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் சுமார் 7000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுகளை நடத்த இருக்கிறது. இப்போது விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிகளுக்கு https://tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் நேரடியாக விண்ணப்பங்களை செலுத்தலாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில், குரூப் 4 தேர்வு மூலம் மொத்தம் 7138 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. மேலும் இதற்கு 10ம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி என்பதால் பலரும் தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – மார்ச் 30
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – ஏப்ரல் 28

காலியிட விவரங்கள்:

மொத்த எண்ணிக்கை – 7138

பதவி:

  • கிராம நிர்வாக அலுவலர் (VAO) அதிகாரி
  • இளநிலை உதவியாளர்
  • இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு)
  • பில் கலெக்டர் தரம்-I
  • கள ஆய்வாளர்
  • தட்டச்சர்
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு-III)

தகுதி அளவுகோல்கள்:

  • VAO, இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு), இளநிலை உதவியாளர் (பாதுகாப்பு அல்லாத), பில் கலெக்டர் மற்றும் வரைவாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து SSLC அல்லது 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் SSLC அல்லது 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கள ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

VAO21 முதல் 30 ஆண்டுகள்
மற்ற பதவிக்கு – 18 முதல் 30 வயது வரை

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!