அஸ்ஸாமில் 3 அரசு விடுமுறை நாட்கள் மாற்றம் – பட்டியல் வெளியீடு!
அசாம் மாநிலத்தில் 3 அரசு விடுமுறை நாட்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அரசு விடுமுறை:
அசாம் மாநிலத்தில் பொது நிர்வாகத் துறை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. அதாவது, சங்கரதேவ் திதி காரணமாக ஆகஸ்ட் 18, கரம் பூஜை காரணமாக ஆகஸ்ட் 27 மற்றும் சங்கர்தேவின் ஜன்மோத்ஸவ் காரணமாக செப்டம்பர் 25 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் இயங்காது என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அரசு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய உத்தரவு – பீகார் கல்வித்துறை கடிதம்!!
அந்த வகையில், மூன்று விடுமுறை நாட்களின் தேதி அசாம் மாநில அரசால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சங்கரதேவ் திதிக்கான விடுமுறை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விடுமுறையாக இருக்கும். கரம் பூஜைக்கான விடுமுறை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 25ஆம் தேதி விடுமுறை நாளாக இருக்கும். சங்கர்தேவின் ஜன்மோத்ஸவ் நிகழ்வுக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.