Home news தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி – போக்குவரத்துத்துறை!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி – போக்குவரத்துத்துறை!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி – போக்குவரத்துத்துறை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி - போக்குவரத்துத்துறை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, பழைய பஸ் பாஸ் அனுமதி – போக்குவரத்துத்துறை!

தமிழகத்தில் நவ.1 ம் தேதி தொடக்க & நடுநிலை பள்ளிகள் திறக்கவுள்ளன. அதனால் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பழைய பஸ்பாஸை காட்டி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பேருந்து பயணம்:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் அந்த குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைகள் அளிக்கப்பட்டு வந்தது. அதனால் தற்போது தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விட்டது. அதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறுகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைகளுக்கு பின்னர் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நவ.1 ம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்தனர்.

Wipro நிறுவனத்தில் பெண்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரங்கள் இதோ!

அதாவது தீபாவளி பண்டிகை வருவதால் அதனை முடித்து விட்டு பின்னர் பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே இருப்பதால் பள்ளி வகுப்பறைகள் கல்வித்துறை அலுவலர்களால் மேற்பார்வையிடப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர இருப்பதால் அவர்கள் மனநிலையை புரிந்து நடந்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வாகன ஓட்டுனர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்தியிருக்கிறார்களா? என்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்வதற்கு முன் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்!

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவற்கான ஏற்பாடுகள் உட்பட அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து மாணவர்கள் பெரும்பாலானோர் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகின்றனர். அதனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களுக்கு உடனடியாக பஸ்பாஸ் வழங்க இயலாது. எனவே பழைய பஸ்பாஸ், பள்ளி அடையாள அட்டை ஆகிய இரண்டில் ஒன்றை காண்பித்து மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பின் மூலம் பள்ளிகள் திறப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here