பிப்ரவரி 4 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

பேரறிஞர் அண்ணா 49-வது நினைவு நாள் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி: சென்னையில் 35 கோயில்களில் பொது விருந்து

  • பேரறிஞர் அண்ணா நினைவு தினம் ஆண்டுதோறும் பிப். 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நேற்று அண்ணாவின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உலகில் முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பிரத்யேக யுடியூப் சேனல்: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தொடக்கம்

  • ஒவ்வோர் ஆண்டும் பிப். 4-ம் தேதி சர்வதேச புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.

முத்தலாக் நடைமுறையை தடுக்க நிக்காஹ்நாமாவில் மாற்றம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் யோசனை.

  • ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் கூறி அளிக்கப்படும் விவாகரத்திற்கு முத்தலாக் முறை எனப் பெயர். இதன் மீது கடந்த ஆகஸ்ட்டில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சுதந்திர இந்தியாவில் ஒரு வரலாற்று மைல்கல் எனக் கருதப்படுகிறது. அதில் 1400 வருடங்களாக முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தி வந்த முத்தலாக் முறை சட்டவிரோதம் எனக் கூறி தடை விதிக்கப்பட்டது.
  • இதை தீவிரமாக அமலாக்க வேண்டி, முத்தலாக் கூறி விவாகரத்து செய்வோருக்கு ஜாமீன் கிடைக்காத 3 வருட சிறைத் தண்டனை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது.

ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது உலகிலேயே கட்டுப்பாடு மிக்கது இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி பாராட்டு

  • உலகிலேயே மிகவும் கட்டுப்பாடு மிக்கது இந்திய ராணுவம்தான் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி பாராட்டியுள்ளார். மேலும், அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியத் தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த அமெரிக்க தளபதி

  • இந்தியாவின் போர் விமானம் தேஜாஸில் அமெரிக்க விமானப் படை தலைமைத் தளபதி டேவிட் எல்.கோல்ட்பெயின் நேற்று பயணம் செய்தார்.
  • இந்நிலையில், இந்திய விமானப்படை போர் விமானங்களை அவர் நேற்று பார்வையிட்டார்.

சாலையை பராமரிக்காவிட்டால் சுங்க வரி பாதியாக குறைக்கப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

  • மதுரை – விருதுநகர் இடையிலான நெடுஞ்சாலை சரியாக பராமரிக்கப் படாததை தொடர்ந்து சுங்க கட்டணத்தை பாதியாக குறைக்குமாறு என்எச்ஏஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள சுங்க வரிச் சாலைகள் அனைத்தும் சரிவர பராமரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு என்எச்ஏஐ தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ‘தமிழ்நாடு இல்லம்’ பெயரில் மாற்றம் இல்லை: வளாகங்களுக்கு மட்டும் புதிய பெயரிடப்பட்டுள்ளதாக விளக்கம்

  • டெல்லியில் உள்ள இரு தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மாற்றம் இல்லை. இரு வளாகங்களுக்கு மட்டும் தனித்தனி பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியா

வரலாறு படைக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டுள்ளன: அசாம் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

  • தனது தலைமையிலான அரசு மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா மாறியதோடு கடந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக 6,000 கோடிடாலர் முதலீடு வந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
  • அனைத்து திட்டங்களும் உரிய காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட வேண் டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

பிட்காயின் பரிவர்த்தனைக்கு வரி உண்டு: முதலீட்டாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

  • பிட்காயினில் முதலீடு செய்து லாபம் ஈட்டிய முதலீட்டாளர்கள் வரி செலுத்த வேண்டும். செலுத் தாத சில லட்சம் முதலீட்டாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் சுஷில் சந்திரா கூறியிருக்கிறார்.

சுகாதார துறையால் சாதகமான விளைவுகள் உருவாகும்: முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன் கருத்து

  • மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல சாதகமான விளைவுகள் உருவாகும் என முன்னாள் நிதிதுறை செயலாளர் நாராயணன் தெரிவித்தார்.

சிறு, குறுந் தொழில்களே பொருளாதாரத்தின் முதுகெலும்பு: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதம்

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்பவை சிறு, குறுந்தொழில்களே என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் தொல்லியல் துறை முன்னாள் அதிகாரிகள் ஆய்வு

  • மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ கோவில்களில் 63-வது இடமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.
  • இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தொல்லியல் துறையினருடன் இயங்கும் கோவில்கள் புனரமைப்பு குழு ஆலோசனைப்படி இக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக ரூ. 50 கோடி செலவில் 40 மில்லியன் பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை!

  • முதல்கட்டமாக ரூ. 50 கோடி செலவில் 40 மில்லியன் பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

அஸ்ஸாமில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம்: தர்மேந்திர பிரதான்

  • அஸ்ஸாமில் இருந்து இதர வடகிழக்கு மாநிலங்களுக்கு 1,500 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

உலகம்

அணு தீவிரவாதம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • 21-ம் நூற்றாண்டில் அணு தீவிரவாதம் மிக முக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் அரசு சாரா அமைப்புகளின் கைகளுக்கு செல்வது உலக அமைதிக்கு நல்லதல்ல. இதைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். அணு ஆயுதங்களைப் பெற முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்ப்- எப்பிஐ மோதல் முற்றுகிறது

  • அமெரிக்க புலனாய்வு போலீஸ் பிரிவான எப்பிஐ அமைப்புக்கு எதிராக அந்த நாட்டு அரசு தரப்பில் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப், எப்பிஐ அமைப்பு இடையிலான மோதல் முற்றியுள்ளது.

 

மாலத்தீவில்பாராளுமன்றத்தைராணுவம்தங்களதுகட்டுப்பாட்டில்கொண்டுவந்தது

  • மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. 9 பேர் மீதும் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
  • மேலும், அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தலைமையிலான மாலத்தீவு முன்னேற்றக் கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

 விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து 2 ரஷிய வீரர்கள் சாதனை

  • அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர்.
  • ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தங்கியுள்ளனர்.
  • இவர்கள் இருவரும் 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர்.

Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!