Home news Education UPSC IAS, IPS தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

UPSC IAS, IPS தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

0
UPSC IAS, IPS தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
UPSC IAS, IPS தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
UPSC IAS, IPS தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசு நடத்தும் குடிமை பணிகளுக்கான தேர்வுகள் நாளை முதல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று யுபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாட்களில் பொது போக்குவரத்தை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

UPSC:

இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான பதவிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மத்திய அரசின் பெரும்பாலான பணியிடங்களுக்கு இந்த UPSC மூலமாகவே ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இத்தேர்வுகள் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களை கொண்டது. இந்த மூன்று கட்டங்களிலும் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் தேர்வர்கள் பங்கு பெறுவர். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

ஜனவரி 16 வரை 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

2021ம் ஆண்டு UPSC தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2021 அகஸ்ட் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதால் UPSC தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் 2022 ஜனவரி 7,8,9,15,16 ஆகிய தேதி முதன்மை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பு பணியாக கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம்! ஊரடங்கு எதிரொலி!

மேலும் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்துகின்றனர். இந்த நிலையில் UPSC தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த UPSC தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான தேர்வுகள் நாளை முதல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்களின் சுமுகமான பயணத்தை உறுதி செய்யுமாறு, தேர்வு எழுதுவோருக்கு, தேர்வு கண்காணிப்பாளருக்கும் எந்தவித தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here