Home news OLA Electric Scooter ரூ.499க்கு முன்பதிவு மீண்டும் தொடக்கம் – புதிய அம்சங்கள் & விலை நிலவரம்!

OLA Electric Scooter ரூ.499க்கு முன்பதிவு மீண்டும் தொடக்கம் – புதிய அம்சங்கள் & விலை நிலவரம்!

2
OLA Electric Scooter ரூ.499க்கு முன்பதிவு மீண்டும் தொடக்கம் – புதிய அம்சங்கள் & விலை நிலவரம்!
OLA Electric Scooter ரூ.499க்கு முன்பதிவு மீண்டும் தொடக்கம் - புதிய அம்சங்கள் & விலை நிலவரம்!
OLA Electric Scooter ரூ.499க்கு முன்பதிவு மீண்டும் தொடக்கம் – புதிய அம்சங்கள் & விலை நிலவரம்!

Ola Electric ஸ்கூட்டர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மீண்டும் முன்பதிவு செய்யும் சேவையை தொடங்க உள்ளது. இதனை ரூ.499க்கு முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Ola ஸ்கூட்டர் முன்பதிவு:

அன்றாட வாழ்வில் அனைவரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வாகனங்கள் மாறிவிட்டது. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பலரது கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் போது, விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது ஓலா நிறுவனம்.

இந்தியாவில் 20 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் – அறிக்கையில் ஷாக் தகவல்!

கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட முன்பதிவானது தொடங்கிய இரண்டு நாட்களில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள வணிகத்தை செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் முன்பதிவு தளத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முதலில் ஸ்கூட்டர் விநியோகம் செய்யப்படும் என நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டிருந்த நிலையில் 2,999 ரூபாயில் தொடங்கி EMI திட்டத்தையும் வழங்கியது அந்நிறுவனம். ஓலா எலக்ட்ரிக் எஸ் 1-ன் விலை ரூ.99,999 லும், எஸ்1 ப்ரோ ரூ.1,29,999 லும் தொடங்குகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!

இந்த வார தொடக்கத்தில், இ-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் பேங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி, கோடக் மஹிந்திரா பிரைம், டாடா கேப்பிடல் மற்றும் YES வங்கி ஆகியவற்றுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிதான கடன் வசதிகளை பெறுவதற்கான வழங்க வழிவகை செய்துள்ளது. அதனை தொடர்ந்து Ola Future Factory முழுவதும் பெண்களால் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வலைத்தளமான olaelectric.com மூலம் ரூ .499 என்னும் ஆரம்ப தொகைக்கு முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

2 COMMENTS

  1. I don’t think it is affordable price for tamilnadu.. bcz state govt also not providing subsidy… It is not worth as your review…don’t create sympathy. And dont use fancy words….. As I understood from your review, it can be buy salaried persons only. That too they should govt staff. OLA wants to safeguard them business only, not indian peoples… I want ask that, is there OLA provides any special offer for poor and middle class peoples? they are not aware of that india has 90% peoples are in middle class.. now a days a car also this price.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here