Home news மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – தீபாவளி போனஸுடன், 18 மாத நிலுவை DA!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தற்போது தீபாவளி போனஸுடன் வழங்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

தீபாவளி போனஸ்:

மத்திய அரசு தனது 48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய படிகளை கொரோனா பெருந்தொற்று காரணமாக நிலுவையில் வைத்துள்ளது. இறுதியாக 17% அகவிலைப்படி ஊழியர்களுக்கு வழங்கியது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 28 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 11 % டியர்னஸ் அலவன்ஸ் (DA) மற்றும் Dearness Relief (DR) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

TNPSC, TRB போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் தேவை! உடனே விண்ணப்பியுங்கள்!

இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக இந்திய ஓய்வூதியர் மன்றம் மத்திய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜேசிஎம் செயலாளர் தேசிய கவுன்சில் ஷிவ் கோபால் மிஸ்ரா, கடந்த ஒன்றரை வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவை தொகை விரைவில் பணியாளர்களுக்கு கிடைக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கூறினார்.

தமிழகத்தில் 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வங்கியாளர் குழுமம் அறிவிப்பு!

1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2021 வரை, DA விகிதம் 17 சதவீதமாக இருந்தது. ஒவ்வொரு தவணையில் குறிப்பிட்ட அளவு உயர்த்தப்பட்டு மொத்தமாக 11% DA உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு கோரிக்கைகளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எட்டியுள்ள நிலையில், தீபாவளி போனஸுடன் நிலுவையில் உள்ள 18 மாத காலத்திற்கான அகவிலைப்படி மற்றும் DR சேர்த்து வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வுடன் தொடர்புடைய அனைத்து பலன்களும் ஊழியர்களுக்கு கிடைக்க இருப்பதால் ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here