தமிழகத்தில் 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வங்கியாளர் குழுமம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வங்கியாளர் குழுமம் அறிவிப்பு!
தமிழகத்தில் 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வங்கியாளர் குழுமம் அறிவிப்பு!
தமிழகத்தில் 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வங்கியாளர் குழுமம் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வங்கிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் அரசின் நிர்வாக பணிகளுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான பணிகளை மேற்கொண்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தின் 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களிலும் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

WhatsApp நிறுவனத்தின் சூப்பர் அப்டேட் – பயனர்களுக்கு கூடுதல் வசதி! தவறாமல் படிங்க!

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் நாள் அன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் உள்ளிட்ட 11 விதமான அடையாள அட்டைகள் கொண்டு வாக்களிக்கலாம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை முக்கிய உத்தரவு!

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி சீட்டு பெற்றவர்கள் ஆகியோர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் நுழைய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here