1 – 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வெளியான அறிவுறுத்தல்கள் – பள்ளிக்கல்வித்துறை அறிக்கை!

0
1 - 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வெளியான அறிவுறுத்தல்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிக்கை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆனது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிவுறுத்தல்கள்:

  • தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதியோடு தேர்வுகள் முடிவடைகிறது.
  • இதனால் ஆறாம் தேதி முதல் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரம்ஜான் மற்றும் தேர்தல் காரணமாக தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இதனால் இடையில் உள்ள நாட்களுக்கான பணி மற்றும் கோடை விடுமுறைக்கு முன்னர் ஆசிரியர்களுக்கான பணி குறித்தான அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
  • நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
  • 15 முதல் 19ஆம் தேதி வரை தேர்தல் காரணமாக நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.
  • மேலும் அடுத்து ஏப்ரல் 22 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுகளில் மாணவர்களை கலந்து கொள்ள செய்ய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் 26 ஆம் தேதி வரை பணியில் ஈடுபடுவார்கள்.
  • குறிப்பாக தேர்தல் பணிக்கு செல்லும் போது on duty கணக்கில் அவர்களது பணி குறிப்பிடப்படும்.

இனி பள்ளி வாகனங்களில் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள் – முழு விவரங்களுடன்!

  • தேர்தல் பணி இல்லாத நேரங்களில் விடைத்தாள்களை திருத்துவது, மாணவர்களுக்கான தேர்ச்சி விவரங்களை அறிவிப்பது, பதிவு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • மேலும் இணையதள இணைப்பு பெரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
  • எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இப்பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • இதைத்தவிர தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!