10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை – விண்ணப்பிக்க டிச.25 கடைசி!

0
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை - விண்ணப்பிக்க டிச.25 கடைசி!
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை - விண்ணப்பிக்க டிச.25 கடைசி!
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை – விண்ணப்பிக்க டிச.25 கடைசி!

இந்திய கடற்படையில் செய்லர் பதவியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடற்படையில் வேலை:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய கடற்படையில் செய்லர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்களை பின்வருமாறு காணலாம்.

பணி: SAILORS (Sports Quota Entry-01/2022 Batch)

தகுதி: 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவில் போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தபட்சம் 3வது இடம் பிடித்திருக்க வேண்டும்.

சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா, அம்மாவின் தைரியத்தை பார்த்து மகிழ்ச்சியில் எழில் – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

சம்பளம்: மாதம் ரூ.21,700 – 43,100 வழங்கப்படும்.

வயது வரம்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 17 முதல் 21 வயது வரையும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 17 முதல் 22 வயது வரையும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் விளையாட்டு தகுதிகள் அடிப்படையில் இந்திய கடற்படை நடத்தும் மருத்துவ மற்றும் விளையாட்டு திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பின் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் டிச.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!