அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியான சூப்பர் நியூஸ்.. புத்தாண்டு பரிசும் இருக்கு!
இந்தியாவின் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக அகவிலைப்படி எப்போது உயரும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அகவிலைப்படி
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பணம் வீக்கம் அதிகரித்து வருவதால் நாம் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஊழியர்கள் அகவிலைப்படியை வழங்கி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார நெருக்கடி காரணமாக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் அகவிலைப்படியை படி வழங்க வேண்டும் கோரிக்கைகளை விடுத்தனர்.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து ஆலோசிக்கப்பட்டு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டது. 34% ஆக வழங்கப்பட்ட அகவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலும் 4% உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2022 ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சாதியினை குறிப்பிடும் படி உள்ள அரசு பள்ளிகளின் பெயர் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு எப்போது என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த வருட நிலவரத்தை வைத்து பார்க்கும் போது வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி அகவிலைப்படி உயர்வு 5% வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையானது வழங்கப்படலாம் என்றும் தகவல் வந்துள்ளது.